Tuesday, 29 July 2014

ஜாதகருக்கு எதிரிகளால் தொல்லை உண்டா?


ஒருவருடைய 7ம் பாவமானது ஜாதகரை தொடர்பு கொள்ளக்கூடிய மனிதர்களையும், அவருக்கு நிகரான நபர்களையும், தொழில் போட்டியளர்களையும், வடிக்கையளர்களையும், எதிரிகளையும் காட்டக்கூடியது. ஜாதகரின் 7ம் பாவமானது தான் நின்ற நட்சத்திர உபநட்சதிரத்தின் மூலம் 8ம் பாவத்தினை தொடர்புகொள்ளும் பொழுது எதிரிகளால் தொல்லைகள் ஜாதகருக்கு அதிகம் வரும். அதன் மூலம் ஜாதகர் அசிங்க அவமானங்களை சந்திக்க நேரிடும்.

7ம் பாவமானது 12 பாவத்துடன் தொடர்பு கொள்ளும் பொழுது எதிரிகளிடம் தோல்வி அடைவதை காட்டும். அப்படி இல்லாமல் ஜாதகரின் 7ம் பாவம் 6ம் பாவத்துடன் தொடர்பு கொண்டு இருந்தால், எதிர்களை எளிதாக வெற்றி கொள்வார்.

7ம் பாவமானது ஒற்றைப்படை பாவங்களாகிய 1,3,5,7,9,11 பாவங்களை தொடர்பு கொள்ளும் பொழுது ஜாதகரின் வாழ்நாளில் தன்னை சந்திக்கும்,தொடர்பு கொள்ளும் நபர்கள் மூலம் பெரிய அளவிற்கு பிரச்சினைகளை அடைய மாட்டார். ஜாதகரின் 7ம் பாவம் ஒற்றைப்படை பாவங்களுடன் தொடர்பு கொள்ளும் பொழுது ஜாதகர் அனைவருடனும் சமாதானமாகவே செல்ல விரும்புவார்.

நன்றி நண்பர்களே!

Su.Suresh
astrovaasan@gmail.com

Saturday, 26 July 2014

பங்குச்சந்தையும் ஜாதக அமைப்பும் – பாகம் 3


5ம் பாவம் தான் நின்ற நட்சத்திர உப நட்சத்திரம் மூலம் 2ம் பாவத்தினை தொடர்பு கொள்ளுவது ஷேர் டிரேடிங் செய்வதற்கு சிறப்பான தொடர்பு. ஷேர் மார்க்கெட் தொழிலின் மூலம் ஜாதகரின் தன நிலை உயரும்.

5ம் பாவம் 2ம் பாவ தொடர்பு கொண்ட ஜாதகர் தொழிலாகவே இதனை செய்யலாம். தசா புத்திகள் 1,5,9 ஆகிய பாவங்களை தொடர்பு கொண்ட கால கட்டங்களில் தொழிலில் இழப்புகளை சந்திப்பார்.   

2ம் பாவம் 2,6 பாவ தொடர்புகளை பெற்று இருந்தால் புரோக்கர் ஆபீசில் வேலை பார்க்க சிறப்பான அமைப்பு ஆகும்.

2ம் பாவம் 2,10 பாவ தொடர்புகளை பெற்று இருந்தால் புரோக்கர் ஆபீஸ் நடத்தும் அமைப்பை ஜாதகர் எளிதாக பெறுவார்.

இனி கிரகங்கள் 2ம் பாவ தொடர்பு கொண்டு ஷேர் மார்க்கெட் தொழில் ஈடுபடும் ஜாதகருக்கு வாய்ப்புகள் எப்படி அமையும் என்று பார்க்கலாம். மேலும் ஒரு குறிப்பிட்ட கிரகம் உபநட்சதிரமாக அமைந்து 2 ம் பாவ தொடர்பும் கொண்டு இருந்தால் கீழ்க்கண்ட பலன்கள் சிறப்பான முறையில் அமையும்.   

சூரியன் 2ம் பாவ தொடர்பு கொண்டு இருந்தால் ஜாதகர் அரசு சம்மந்தான துறைகளில் (Insurance) வேலை செய்யும் வாய்ப்புகள் அமையும்.  

சந்திரன் 2ம் பாவ தொடர்பு கொண்டு இருந்தால் அடிக்கடி லாபத்தினை அடைவார்.

செவ்வாய் 2ம் பாவ தொடர்பு கொண்டு வணித்தில் ஈடுபடும் ஜாதகர் அடுத்தவர் முதலீட்டில் வணிகத்தில் ஈடுபடுவார். தன்னுடைய பொறுப்பில்லாத நடவடிக்கையால் நஷ்டம் அடைவார். அவருடைய பேச்சில் நியாயம் இருக்கவே இருக்காது.

ராகு 2ம் பாவ தொடர்பு கொண்டு இருந்தால் அடுத்தவர்களின் முதலீட்டில் இவர் வர்த்தகத்தில் ஈடுபடுவார். அடுத்தவர்களை சிறப்பாக வழி நடத்துவார்.

குரு 2ம் பாவ தொடர்பு கொண்டு இருந்தால் ஜாதகர் ஷேர் மார்க்கெட்டில் பற்றிய வகுப்புகளை நடத்தி அதன் மூலம் வருமானம் ஈட்டுவார்.

சனி 2ம் பாவ தொடர்பு பெற்று இருந்தால் ஜாதகருக்கு குறைந்த அளவிற்கே சம்பாதிக்க முடியும்.  

கேது 2ம் பாவ தொடர்பு கொண்டு இருந்தால் ஷேர் மார்க்கெட்டில் வதந்திகளை பரப்பி தந்திரமான முறையில் லாபம் அடைவார்.   

புதன் 2ம் பாவ தொடர்பு பெற்று தசா புத்தி நடைபெறும் காலங்களில் ஜாதகர் அரசு வெளியிடும் பத்திரங்களில் முதலீடு செய்வதன் மூலம் வருமானம் ஈட்ட முடியும். முதிய முறைகளை (Technical)  உபயோகம் செய்து வணிகத்தில் ஈடுபடுவார்.

சுக்கிரன் 2ம் பாவ தொடர்பு கொண்டால் நன்றாக பேசுவார். ஊடகங்களில் ஷேர் மார்க்கெட் பற்றிய செய்திகளை வெளியிடுவதின் மூலம் பணம் சம்பதிப்பார்.   

5ம் பாவம் தான் நின்ற நட்சத்திர உப நட்சத்திரம் மூலம் 2ம் பாவத்தினை தொடர்பு கொண்ட ஜாதகர் ஷேர் டிரேடிங் ஈடுபாட்டால் பெரிதாக அசிங்க அவமானங்களை அடைய மாட்டார்.
   
நன்றி நண்பர்களே!
Su.Suresh
astrovaasan@gmail.com

Friday, 25 July 2014

பங்குச்சந்தையும் ஜாதக அமைப்பும் – பாகம் 2


5ம் பாவம் தான் நின்ற நட்சத்திர உப நட்சத்திரம் மூலம் 1ம் பாவத்தினை தொடர்பு கொள்ளுவது ஷேர் டிரேடிங் செய்வதற்கு சிறப்பான தொடர்பு அல்ல. இவரால் பெரிதாக சம்பாதிக்கவும் முடியாது. பெரிய அளவிற்கு இழப்புகளையும் பெற மாட்டார்.

மேலும் அடுத்தவரிடம் டிப்ஸ் வாங்க மாட்டார். சுயமாகவே டிரேடிங் செய்ய விரும்புவார். 5ம் பாவத்தின் 1ம் பாவ தொடர்பு ஷேர் டிரேடிங்கை தொழிலாகவே செய்ய சிறப்பான தொடர்பு அல்ல.

5ம் பாவம் 1,11 பாவ தொடர்பு பெற்று இருந்தால் புதிய யுத்திகளை கற்று பயன்படுத்தி பார்ப்பதில் அதிக ஈடுபாடு காட்டுவார்.

5ம் பாவம் தான் நின்ற நட்சத்திர உப நட்சத்திரம் மூலம் 1ம் பாவத்தினை தொடர்பு கொண்ட ஜாதகர் ஷேர் டிரேடிங் ஈடுபாட்டால் பெரிதாக அசிங்க அவமானங்களை அடைய மாட்டார்.
    
நன்றி நண்பர்களே!
Su.Suresh
astrovaasan@gmail.com



பாங்கு சந்தையும் ஜாதக அமைப்பும் - பாகம் 1


பொதுவாக கமிசன் ரீதியான தொழிலுக்கு ஜாதகரின் 5ம் பாவத்தை ஆராய வேண்டும். 6ம் பாவம் என்பது உடல் உழைப்பின் மூலம் கிடைக்கும்  வருமானத்தையும் மற்றவரிடம் வேலை பார்ப்பதையும் குறிக்கும்.

ஆனால் 5ம் பாவம் என்பது 6ம் பாவத்திற்கு 12ம் பாவமாக வருவதால் அடுத்தவரிடம் அடிமை வேலை செய்யாமல் யாருக்கும் கட்டுப்படாமல் இருப்பதை குறிக்கும்.

சிரமம் இல்லாமல் உட்கார்ந்த இடத்திலேயே சம்பாதிக்க கூடிய ஷேர் டிரேடிங் என்று அழைக்க கூடிய கமிசன் தொழில் 5ம் பாவத்தில் உள்ளது. ஷேர் மார்க்கெட்டில் வாங்குவது அல்லது விற்பது (sell or buy) என்ற இரண்டு முறைகள் தான் உள்ளது. இதில் சம்பாதித்து உயர்ந்தவர்கள் வெகு சிலரே.

பெரும்பான்மையானவர்கள் தங்களுடைய சொத்துகளை இழக்கவே செய்கின்றனர். வாங்குவது விற்பது தவிர வேறு முறைகளும் உள்ளன பணம் சம்பாதிப்பதற்கு. அதாவது ஷேர் மார்க்கெட்டின் நெளிவு சுளிவுகளை வகுப்புகள் நடத்துவதன் மூலமும், டிப்ஸ் என்று சொல்லக்கூடிய எதை வாங்க வேண்டும் விற்க வேண்டும் என்பதனை மாத மாதம் பணம் வாங்கிக்கொண்டு அடுத்தவர்களை வழிநடத்தி வருமானம் ஈட்டுபவர்களும் உண்டு. மேலும் ஷேர் புரோக்கர் ஆபீஸ் வைத்து கொண்டு கமிசன் பெறுவார்கள்.

அந்த உடல் உழைப்பு இல்லாமல் வருமானத்தையோ இழப்புகளையோ தரக்கூடிய 5ம் பாவம் தான் நின்ற நட்சத்திர உப நட்சத்திரம் மூலம் 1 முதல் 12 பாவங்களை தொடர்பு கொள்ளுவதன் மூலம் ஜாதகருக்கு என்ன தர போகின்றது என்பதை பார்க்கலாம்.

நன்றி நண்பர்களே!

Su.Suresh
astrovaasan@gmail.com

Wednesday, 23 July 2014

ஜாதகருக்கு அரசு உத்தியோகம் உண்டா?



ஜாதகரின் 6ம் பாவம் வலுவாக இருந்து சூரியனும் 2,4,6,10 ம் பாவங்களை தொடர்பு கொண்டு இருந்தால் அரசு துறை சார்ந்த வேலை அமையும்.

6ம் பாவம் தன்னுடைய பாவத்திற்கும் 10ம் பாவத்திற்கும் பாதக பாவங்களாகிய 1,5,9 ம் பாவங்களை தொடர்பு கொண்டு, சூரியனும் 1,5,9 ம் பாவங்களை தொடர்பு கொண்டு இருந்தால் ஜாதகர் எந்த வித வேலையும் செய்ய மாட்டார். அரசாங்கம் மூலம் எந்த வித பொருளாதார உயர்வும் இருக்காது.

6ம் பாவம் கெட்டு இருந்து அதாவது 1,5,9 ம் பாவ தொடர்பு கொண்டு இருந்து சூரியன் வலுவுடன் (2,4,6,10) இருந்தால் ஜாதகருக்கு அரசாங்க உத்தியோகம் கிடைக்காது. ஆனால் தந்தை அல்லது அரசியல் மூலம் ஆதாயங்கள் கிடைக்க வாய்ப்பு இருக்கும். அதாவது அரசு மூலமான ஒப்பந்தங்கள், தந்தை அரசாங்க உத்தியோகத்தில் இருப்பது போன்றவற்றின் மூலமாக அரசாங்க பணத்தினை அனுபவிக்க முடியும்.

நன்றி நண்பர்களே!
SU.சுரேஷ்

astrovaasan@gmail.com

ஜாதகர் சொந்த தொழில் செய்வாரா? அல்லது மற்றவரிடம் பணிபுரிவாரா?



ஒருவருடைய ஜாதகத்தில் 6ம் பாவம் என்பது மற்றவரிடம் பணி புரிவதையும், உடல் உழைப்பையும் குறிக்கும். 7ம் பாவம் சொந்த தொழிலையும், வெளி உலக தொடர்பையும், நம்மிடம் தொழில் ரீதியாக தொடர்பு கொள்ளும் சரி சமமான நபர்களையும் குறிக்கும். 

பொதுவான விதி என்பது கர்ம ஸ்தானம் என்று சொல்லக்கூடிய 2,6,10ம் பாவங்களோ அல்லது அதற்கு சாதகமான பாவங்களோ 6 மற்றும் 10 பாவங்களை தொடர்பு கொள்ளும் பொழுது அவற்றின் ரீதியாக ஜாதகருக்கு தொழில் அமையும்.

7ம் பாவம் 2,10ம் பாவங்களுக்கு சாதகமற்ற பாவங்களுடன் தொடர்பு கொள்ளும் பொழுது, ஜாதகர் தன்னுடைய வாடிக்கையாளர்களிடம் இருந்து பணம் சம்பாதிக்க முடியாது. அதாவது சொந்த தொழில் கொடுப்பினை இல்லை என்று கூறலாம். மேலும் இவர் தொழில் செய்தால் வருமானம் வராது, அல்லது பெரிதாக உழைக்க மாட்டார்.

6ம் பாவம் 2,4,6,10 பாவங்களுடனோ அல்லது அதற்கு சாதகமான பாவங்களுடனோ தொடர்பு கொண்டு இருந்தால் வாழ்க்கையின் பெரும் பகுதி அடுத்தவரிடம் வேலை பார்ப்பார். மேலும் 6ம் பாவம் 8,12 ம் பாவத்துடன் தொடர்பு கொண்டு இருந்தால் மற்றவரிடம் ஜாதகர் அடிமை வேலை பார்க்க நேரிடும். உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்காது.

நன்றி நண்பர்களே!
Su.Suresh

astrovaasan@gmail.com

ஜாதகருக்கு கண் நோய் உண்டா?


ஒருவருடைய ஜாதகத்தில் 2ம் பாவம் கண் பார்வையை குறிப்பது ஆகும். 2ம் பாவத்தின் உபநட்சத்திர அதிபதி 6,8 மற்றும் 12ம் பாவங்களுக்கும் உபநட்சதிரமாக அமைந்தாலோ, 2ம் பாவம் தான் நின்ற நட்சத்திர உப நட்சத்திரத்தின் மூலம் 6,8,12 பாவங்களை தொடர்பு கொண்டாலோ கண்களில் குறைபாடு உண்டு என அறியலாம். 

6ம் பாவம் என்பது மருந்து மாத்திரை மூலம் குணப்படுத்தகூடிய அடிக்கடி வரும் நோயை குறிக்கும். 8ம் பாவம் என்பது கண் பார்வையில் வலி வேதனைகளுடன் பழுது ஏற்படுவதையும், 12ம் பாவம் என்பது கண்கள் செயல் இழந்து விடுவதையும் குறிக்கும்.

மேலும் 2ம் பாவம் அகம் சார்ந்த பாவங்களுடன்(1,3,5,7,9,11) தொடர்பு கொண்டு இருந்தால் கண் சம்மந்தமான நோய்களோ அதன் மூலம் வலி வேதனைகளோ வராது.

நன்றி நண்பர்களே!
Su.Suresh
astrovaasan@gmail.com

ஜாதகரின் தான நிலை எப்படி இருக்கும்?



2ம் பாவத்தின் மூலம் ஜாதகரின் தனநிலையை அறிந்து கொள்ளலாம். 2ம் பாவம் தான் நின்ற நட்சத்திர உப நட்சத்திரத்தின் மூலம் 2,4,6,10 பாவங்களை தொடர்பு கொண்டால் தனது வாழ்நாள் முழுவதும் பண பிரச்சினை இல்லாமல் இருக்க முடியும். 2ம் பாவம் தனக்கு சாதகமான பாவங்களுடன் தொடர்பு கொண்டு இருந்தால் விதி கொடுப்பினை தன நிலை ரீதியில் நன்றாக உள்ளது என கூறலாம்.

மேலும் நடைபெறும் தசா புத்தியானது 2ம் பாவத்திற்கு சாதகமாக இருந்தால் மிகச்சிறப்பான நிலையில் ஜாதகரின் தனநிலை இருக்கும். 2ம் பாவ விதி கொடுப்பினை நன்றாக இருந்து நடைபெறும் தசா புத்திகள் 2ம் பாவத்திற்கு சாதகமற்ற பாவங்களாகிய 1,5,9 பாவங்களை தொடர்பு கொண்டு இருந்தால அந்த கால கட்டங்களில் ஜாதகர் தனது பணத்தை செலவு செய்வார்.

ஆனால் 2ம் பாவம் தான் நின்ற நட்சத்திர உப நட்சத்திரம் மூலம் 1,5,9 பாவங்களை தொடர்பு கொண்டால் அவரின் கையில் பணம் தங்காது என கூறலாம்.

நன்றி நண்பர்களே!
Su.Suresh

astrovaasan@gmail.com

ஜாதகர் பிறந்த ஊரிலேயே வாசிப்பாரா?


சார ஜோதிட முறையில் லக்னபாவம் 4ம் பாவத்தையோ அல்லது 4ம் பாவத்திற்கு சாதகமான பவங்களையோ தொடர்பு கொண்டால் ஜாதகர் பிறந்த ஊரிலேயே வசிக்க முடியும். 4ம் பாவம் என்பது உள்ளூரை குறிக்கும்.

லக்ன பாவம் 4ம் பாவத்திற்கு 12ம் பாவமாகிய 3ம் பாவத்தை தொடர்பு கொண்டால் ஜாதகர் வெளியூரில் வசிக்க நேரிடும். 3ம் பாவம் என்பது குறுகிய தூரத்தை குறிக்கும்.

லக்னபாவம் 9ம் பாவத்தை தொடர்பு கொண்டால் தன்னுடைய ஊரை விட்டு நீண்ட தூரத்தில் வசிக்க நேரிடும்.

நன்றி நண்பர்களே!
Su.சுரேஷ்
astrovaasan@gmail.com

ஜாதகர் கெளரவமான நிலையில் இருப்பாரா?


ஜாதகர் கெளரவமான நிலையில் வாழ்வாரா இல்லையா என்பதனை அவருடைய லக்னபாவத்தின் தொடர்பு மூலம் தெரிந்து கொள்ளலாம். 

லக்ன பாவம் தான் நின்ற நட்சத்திர உப நட்சத்திரம் மூலம் 8,12 பாவங்களை தொடர்பு கொண்டால் இவருக்கு கெளரவ பாதிப்பு ஏற்ப்படும். தன்னுடைய வாழ்நாட்களில் அசிங்க அவமானங்களை சந்திப்பார்.

ஆனால் லக்ன பாவம் அகம் சார்ந்த பாவங்களாகிய 1,3,5,7,9 பாவங்களை தொடர்பு கொண்டால் நல்ல கெளரவமான நிலையில் ஜாதகர் வாழ்வார்.

நன்றி நண்பர்களே!
Su.சுரேஷ்
astrovaasan@gmail.com

ஜாதகரின் எண்ணங்கள் எப்படி இருக்கும்?


வணக்கம் நண்பர்களே!

ஜாதகரின் சிந்தனைகளை லக்ன பாவத்தின் தொடர்புகள் மூலம் அறியலாம். லக்ன பாவம் தான் நின்ற நட்சத்திர உபநட்சத்திரம் மூலம் உயிர்ப்பற்று பாவங்களாகிய 1,3,5,7,9,11 பாவங்களை தொடர்பு கொண்டு இருந்தால் ஜாதகர் பெரும்பாலும் பாசம்,பிறருக்கு கட்டுப்பட்டு வாழுதல், விட்டு கொடுத்து வாழுதல், உணர்சிகளுக்கு அடிமையாகுதல், அனைவருடனும் அன்பாக பழகுதல், நோய் நொடி இல்லாமல், இச்சையில் அதிக எண்ணங்களுடனும், புறம் சார்ந்த விசயங்களில் அதிக நாட்டம் இல்லாமல் இருப்பார்.

ஆனால் பொருட்பற்று பாவங்களாகிய 2,4,6,8,10,12 பாவங்களுடன் தொடர்பு கொண்டு இருந்தால் அகம் சார்ந்த விசயங்களுக்கு அதிக முக்கியத்துவம் தர மாட்டார். மேலும் சுயநலம், விட்டு கொடுக்காமலும்,எதிலும் திருப்தி இல்லாமலும், போட்டி போரமைகளுடனும், பொன்,பணம்,சொத்து முதலியவற்றில் அதிக சிந்தனைகளுடன் இருப்பார்.

நன்றி நண்பர்களே!
Su.Suresh

astrovaasan@gmail.com

ஜாதகரின் உடல் ஆரோக்யம் எப்படி இருக்கும்?




வணக்கம் நண்பர்களே!

ஜாதகரின் லக்ன பாவமானது தான் நின்ற நட்சத்திர உப நட்சத்திரத்தின் மூலமாக 6,8,12ம் பாவங்களை தொடர்பு கொண்டு இருந்தால் ஜாதகர் அடிக்கடி நோயினால் பாதிக்கபடுபவராக இருப்பார்.

6ம் பாவம் நோயையும், 8ம் பாவம் நோயினால் வரும் வலி வேதனைகளையும், 12ம் பாவம் நோயினால் வரும் உடல் செயல் இழந்து போதலையும் குறிக்கும்.

ஆனால் எந்த கிரகங்கள் வலிமையான முறையில் 5,7,11 ம் பாவங்களுடன் தொடர்பு கொண்டு உள்ளதோ அந்த கிரகங்களின் தசா புத்தி காலங்களில் நோயின் தாக்கம் குறைவாக இருக்கும்.

மேலும் லக்னமனது ஒற்றைப்படை பாவங்களுடன் தொடர்பு கொண்டு இருந்தால் வாழ்க்கையின் பெரும்பகுதி நோயின் பாதிப்புகள் இல்லாமல் வாழ முடியும்.

நன்றி நண்பர்களே!
Su.Suresh

astrovaasan@gmail.com

உப நட்சத்திரம்


ஒரு கிரகம் ராசி மண்டலத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் உள்ளது என்பதை, அந்த கிரகம் ஒரு குறிப்பிட்ட ராசியில் உள்ளது என்று கூறுவதை விட, அந்த ராசியில் எந்த நட்சத்திரத்தில் உள்ளது என்று கூறுவதுதான் சிறப்பு. அதை விட அந்த கிரகம், அந்த நட்சத்திரத்தில் உள்ள எந்த உபநட்சத்திரத்தில் உள்ளது என்று கூறுவதே சரியானது.

உதாரணமாக அஸ்வினி என்ற நட்சத்திரத்தினை எடுத்துக்கொள்வோம். இதன் அதிபதி கேது. அந்த அஸ்வினி நட்சத்திரம் 9 பாகமாக பிரிக்கப்பட்டு அதன் முதல் பகுதி கேதுவிற்கும் அடுத்த பிரிவுகள் சுக்கிரன்,சூரியன்,சந்திரன் என தசை முறைப்படி அமையும்.

அதாவது ஒரு தசா ஆரம்பிக்கும் போது முதல் புத்தி எப்படி தசா நாதனின் சுய புத்தியாக வருகின்றதோ அதே முறைப்படி தான் உபநட்சதிரம் அமைகின்றது. ஒரு தசாவில் உள்ள அனைத்து புத்திகளும் ஒரே ஒரே கால அளவை கொண்டிருக்காது. ஒவ்வொரு புத்தியும் தன் தசா கால அளவிற்கு ஏற்ப புத்தியின் கால அளவை கொண்டு இருக்கும். அதே போல ஒரு நட்சத்திரத்தில் உள்ள 9 கிரகங்களின் உப நட்சத்திரங்களும் சமான பாகையை பெற்றிருக்காது.

அதாவது ஒரு நட்சத்திரம் என்பதனை தசாவாக எடுத்துகொண்டால் அந்த தசாவில் உள்ள புத்திகளை உபநட்சதிரமாக எடுத்து கொள்ளலாம்.

நட்சத்திரத்தின் உட்பிரிவான உப நட்சத்திரம், பலன் கூறுவதில் ஜாதகருக்கு தனி தன்மையை நிர்ணயம் செய்யும். ஒரு நட்சத்திரத்தில் ஒரு சில பகுதிகள் நன்மையும், சில பகுதிகள் தீமையும், மற்ற பகுதிகள் நடுநிலை என ஒரு குறிப்பிட்ட செயலுக்கு அமையும். ஏனென்றால் ஒரு நட்சத்திரத்தின் முழு பகுதியும் ஒரே மாதிரியான பலன்களை தருவதில்லை.

நன்றி நண்பர்களே!

சு.சுரேஷ்
astrovaasan@gmail.com

Saturday, 5 July 2014

அரசியல் யோகம் எப்படி அமையும்? - நிறைவு பகுதி


வணக்கம் நண்பர்களே!

5ம் பாவம் 11ம் பாவத்துடன் தொடர்பு கொண்டு இருந்தால், அந்த ஜாதகருக்கு அரசியல் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியான வகையில் அமையும் என்று பார்த்தோம்.

இங்கு 5ம் பாவம் தான் நின்ற நட்சத்திர உபநட்சத்திரம் மூலம் 12ம் பாவத்தினை தொடர்பு கொள்ளும் போது உண்டாகும் பலன்களை பார்ப்போம்.

5ம் பாவம் 12ம் பாவ தொடர்பு கொள்ளும் பொழுது ஜாதகர் அரசியல் மூலம் அனைத்து விதமான பிரச்சினைகளையும் அனுபவிப்பார். இவருடைய பேச்சின் மூலமாக எதிர்மறையான விளைவுகளை சந்திப்பார்.

அரசியல் மூலமாக வலி மற்றும் வேதனைகளை அடைவார். 7ம் பாவத்திற்கு 6ம் பாவமாக 12ம் பாவம் அமைவதால் மக்கள் மற்றும் தொண்டர்களுக்கு அடங்கியே இருக்க வேண்டிய சூழ்நிலையில் இருப்பார்.

அனைத்துவிதமான விரயங்களையும் அரசியல் மூலமாக அடைவார்.

இதுவரை 5ம் பாவம் அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு 1 முதல் 12 பாவங்களுடன் தொடர்பு கொள்ளும் பொழுது ஏற்படும் விளைவுகளை பார்த்தோம். இத்துடன் அரசியல் பதிவுகள் நிறைவு அடைகிறது.

நன்றி நண்பர்களே!
Su.Suresh

அரசியல் யோகம் எப்படி அமையும்? - பாகம் 13



வணக்கம் நண்பர்களே!

5ம் பாவம் 10ம் பாவத்துடன் தொடர்பு கொண்டு இருந்தால், அந்த ஜாதகருக்கு அரசியல் வாழ்க்கை மற்றும் பொருளாதார முன்னேற்றம் நன்றாக இருக்கும் என்று பார்த்தோம்.

இங்கு 5ம் பாவம் தான் நின்ற நட்சத்திர உபநட்சத்திரம் மூலம் 11ம் பாவத்தினை தொடர்பு கொள்ளும் போது உண்டாகும் பலன்களை பார்ப்போம்.

5ம் பாவம் 11ம் பாவ தொடர்பு கொள்ளும் பொழுது ஜாதகருக்கு அரசியலில் அனைத்தும் கிடைக்கும். தேர்தலில் எளிதாக வெற்றி கிடைக்கும். நினைத்ததை நினைத்தவுடன் செய்யக்கூடியவர். எல்லோரிடமும் அன்பாக பழகக்கூடியவர்.  

சந்தோஷமான திருப்தியான அரசியல் வாழ்க்கை அமையும்.

நன்றி நண்பர்களே!

Su.Suresh

அரசியல் யோகம் எப்படி அமையும்? - பாகம் 12


வணக்கம் நண்பர்களே!

5ம் பாவம் 9ம் பாவத்துடன் தொடர்பு கொண்டு இருந்தால், அந்த ஜாதகர் நன்றாக பேசுவார். மக்கள் செல்வாக்கு அதிகம் இருக்கும். வெளி நாட்டினருடன் இவருக்கு நெருங்கிய தொடர்பு இருக்கும் என்று பார்த்தோம்.

இங்கு 5ம் பாவம் தான் நின்ற நட்சத்திர உபநட்சத்திரம் மூலம் 10ம் பாவத்தினை தொடர்பு கொள்ளும் போது உண்டாகும் பலன்களை பார்ப்போம்.

5ம் பாவம் 10ம் பாவ தொடர்பு கொள்ளும் பொழுது ஜாதகருக்கு  மிகச்சிறப்பான முறையில் அரசியல் வாழ்க்கை அமையும்.

தன்னுடைய அரசியல் வாழ்க்கையில் பெரிய பதவிகளை வகிப்பார். அரசியல் மூலமாக பொருளாதார முன்னேற்றம் இருக்கும்.

இவர்கள் நீண்ட நாட்கள் அரசியலில் இருப்பார்கள்.

நன்றி நண்பர்களே!
Su.Suresh

அரசியல் யோகம் எப்படி அமையும்? - பாகம் 11



வணக்கம் நண்பர்களே!

5ம் பாவம் 8ம் பாவத்துடன் தொடர்பு கொண்டு இருந்தால், அந்த ஜாதகர் நன்றாக பேச மாட்டார். அவர் பேச்சின் மூலம் பிரச்சினைகளை அனுபவிப்பார். குறுக்கு புத்தியுடன் செயல்கள் இருக்கும் என்றும், தெய்வ அனுகூலம் இருக்காது என்றும் பார்த்தோம்.

இங்கு 5ம் பாவம் தான் நின்ற நட்சத்திர உபநட்சத்திரம் மூலம் 9ம் பாவத்தினை தொடர்பு கொள்ளும் போது உண்டாகும் பலன்களை பார்ப்போம்.

5ம் பாவம் 9ம் பாவ தொடர்பு கொள்ளும் பொழுது ஜாதகர் நன்றாக மேடைப்பேச்சு பேச கூடியவராக இருப்பார். 9ம் பாவம் என்பது 7ம் பாவத்தின் பரிணாம பாவமாக உள்ளபடியால் பேச்சானது பலரால் பாரட்டப்படக்கூடியதாக இருக்கும்.

9ம் பாவத் தொடர்பின் மூலமாக மக்கள் செல்வாக்கு அதிகம் பெற்று அரசியல் நடத்துவார். இவருக்கு எந்த ஒரு விசயத்தையும் ஆராய்ந்து முடிவு எடுப்பார். பெரிய பொறுப்பான வேலைகளை செய்யமாட்டார். பெண்கள் தொடர்பு அதிகமாக இருக்கும்.

இவரின் அனைத்து செயல்களிலும் மக்களின் ஆதரவு நிறைய இருக்கும். தெய்வ அனுக்கிரகம் பெற்றவர். சூழ்நிலைக்கு ஏற்றவாறு தன்னுடைய நிலையை எளிதில் மாற்றிக்கொள்ள கூடியவர். கட்சி மாற்றம் இருக்கும் இவருடைய அரசியல் வாழ்க்கையில்.

வெளிநாட்டினருடன் இவருக்கு நெருங்கிய தொடர்பு இருக்கும். எந்த ஒரு செயல்களிலும் முன் யோசனையுடன் செயல்படுவார்.

நன்றி நண்பர்களே!

Su.Suresh

Friday, 4 July 2014

பிரசன்னம்

 

நண்பர்களே உங்களுக்கு பிரசன்ன முறையில் ஒரே ஒரு கேள்விக்கு பதில் கூறப்படும்.

தொடர்பு கொள்ளவும் astrovaasan@gmail.com

நன்றி
சு. சுரேஷ்.

அரசியல் யோகம் எப்படி அமையும்? - பாகம் 10


வணக்கம் நண்பர்களே!

5ம் பாவம் 7ம் பாவத்துடன் தொடர்பு கொண்டு இருந்தால் அந்த ஜாதகர் நன்றாக பேசுவார். அவர் செல்லும் இடமெல்லாம் மக்கள் கூட்டம் சேரும் என்று பார்த்தோம்.

இங்கு 5ம் பாவம் தான் நின்ற நட்சத்திர உபநட்சத்திரம் மூலம் 8ம் பாவத்தினை தொடர்பு கொள்ளும் போது உண்டாகும் பலன்களை பார்ப்போம்.

5ம் பாவம் 8ம் பாவ தொடர்பு கொள்ளும் பொழுது ஜாதகருக்கு அழகாக பேசும் திறன் இருக்காது. மக்களுக்கு இவர் பேசுவது புரியாது. மேடையில் பேசும் பொழுது சம்மந்தம் இல்லாதவற்றை பேசி பிரசினையில் சிக்கிக் கொள்ளுவார். அரசியல் மற்றும் கலைதுரையில் அசிங்க அவமானங்களை அடைவார்.

நேர்மையான சிந்தனையுடன் கூடியவராக இவரால் இருக்க முடியாது. எப்பொழுதுமே எந்த ஒரு செயலையும் குறுக்கு புத்தியுடனேயே அணுகுவார். இவருக்கு பிரச்சினைகள் திடீர் திடீர் என்று வரும். இவரால் நிலையாக அரசியல் செய்ய இயலாது. அரசியலில் சிறை வாழ்க்கையும் உண்டு.

5ம் பாவத்தின் 8ம் பாவதொடர்பு மூலம் தெய்வ அனுகூலமும் கிடைக்காது. ஒருவேலை ஜாதகருக்கு 5ம் பாவம் 2,8 பாவத்தொடர்பு பெற்று லக்ன பாவமும் 7ம் பாவ தொடர்பு பெற்று இருந்தால் பெரிய அளவிற்கு பிரச்சினைகள் வராது.

நன்றி நண்பர்களே!
Su.Suresh
astrovaasan@gmail.com

அரசியல் யோகம் எப்படி அமையும்? - பாகம் 9


வணக்கம் நண்பர்களே!

5ம் பாவம் 6ம் பாவத்துடன் தொடர்பு கொண்டு இருந்தால் அந்த ஜாதகர் வெற்றி ஒன்றே குறியாக செயல்படுவார். மேலும் மக்களை சந்திக்க விரும்ப மாட்டார் என்று பார்த்தோம்.

இங்கு 5ம் பாவம் தான் நின்ற நட்சத்திர உபநட்சத்திரம் மூலம் 7ம் பாவத்தினை தொடர்பு கொள்ளும் போது உண்டாகும் பலன்களை பார்ப்போம்.

5ம் பாவம் 7ம் பாவ தொடர்பு கொள்ளும் பொழுது ஜாதகர் நன்றாக மேடைப்பேச்சு பேச கூடியவராக இருப்பார். 7ம் பாவம் என்பது 5ம் பாவத்தின் பரிணாம பாவமாக உள்ளபடியால் பேச்சானது மடை திறந்த வெள்ளம் போல வேகமாக அழகாக பேசக்கூடியவராக இருப்பார்.

7ம் பாவத் தொடர்பின் மூலமாக மக்கள் செல்வாக்கு அதிகம் பெற்று அரசியல் நடத்துவார். இவர் போகின்ற இடமெல்லாம் அதிக கூட்டம் கூடும். மக்கள் சேவை செய்வதே தனது குறிக்கோளாக கொண்டவர்.

மேலும் 7ம் பாவம் 8ம் பாவத்திற்கு 12ம் பாவமாக வருவதால் அரியலில் ரீதியாக எந்த விதமான அசிங்க அவமானங்களை அடைய மாட்டார்.

5ம் பாவம் தான் நின்ற நட்சத்திர உபநட்சத்திரம் மூலம் 7ம் பாவ தொடர்பு கொள்ளுவது அரசியல் மற்றும் கலைத்துறையினருக்கு உன்னதமான அமைப்பு.

நன்றி நண்பர்களே!
Su.Suresh
astrovaasan@gmail.com

Wednesday, 2 July 2014

அரசியல் யோகம் எப்படி அமையும்? - பாகம் 8


வணக்கம் நண்பர்களே!

5ம் பாவம் 5ம் பாவத்துடன் தொடர்பு கொண்டு இருந்தால் அந்த ஜாதகருக்கு கற்பனை,கவிதை மற்றும் பெண்கள் தொடர்பு இருக்கும் என்று பார்த்தோம்.

இங்கு 5ம் பாவம் தான் நின்ற நட்சத்திர உபநட்சத்திரம் மூலம் 6ம் பாவத்தினை தொடர்பு கொள்ளும் போது உண்டாகும் பலன்களை பார்ப்போம்.

5ம் பாவம் 6ம் பாவ தொடர்பு கொள்ளும் பொழுது ஜாதகர் வெற்றி ஒன்றையே குறிக்கோளாக வைத்து செயல்படுவார். பேச்சில் அதிகாரத்தன்மை  மிக அதிகமாக இருக்கும்.

தான் கொண்ட நிலைப்பாட்டில், கருத்தில், செயல்களில் மிகுந்த பிடிவாதத்துடன் இருப்பார். அனைவரையும் தன்னுடைய அதிகாரத்தின் கீழ் வைத்துக்கொள்ள விரும்புவார்.

6ம் பாவவம் 7ம் பாவத்திற்கு 12ம் பாவமாக வருவதால் மக்களை சந்தித்து குறைகளை கேட்பதற்கு விரும்ப மாட்டார். மக்கள் தொடர்பு அதிகம் இருக்காது. இவர் யாரையும் சந்திக்க விரும்ப மாட்டார். இவர் விரும்பினால்தான்  மற்றவர்கள் பார்க்க முடியும்.

அதிகமாக கமிசன் வரும் தொழில்களில் ஈடுபாடு அதிகம் இருக்கும்.

நன்றி நண்பர்களே!

Su.Suresh

அரசியல் யோகம் எப்படி அமையும்? - பாகம் 7


வணக்கம் நண்பர்களே!

5ம் பாவம் 4ம் பாவத்துடன் தொடர்பு கொண்டு இருந்தால் அந்த ஜாதகருக்கு கற்பனை வளம் குறைவாக இருக்கும். மேலும் இவருக்கு போட்டிகள் அதிகம் இருக்கும் என்று பார்த்தோம்.

இங்கு 5ம் பாவம் தான் நின்ற நட்சத்திர உபநட்சத்திரம் மூலம் 5ம் பாவத்தினை தொடர்பு கொள்ளும் போது உண்டாகும் பலன்களை பார்ப்போம்.

5ம் பாவம் 5ம் பாவ தொடர்பு கொள்ளும் பொழுது ஜாதகர் நன்றாக கலை நயத்துடன் போசுபவராக இருப்பார். கவிதை நடையுடன் அவருடைய  பேச்சு இருக்கும்.

இவருடைய ஜாதகத்தில் சுக்கிரன் சாதகமாக இருந்தால் பெண்கள் தொடர்பு அதிகம் கொண்டவராக இருப்பார். மேலும் திரைப்பட துறையுடன் நெருங்கிய தொடர்பு உடையவராக விளங்குவார். இவருக்கு கதை எழுதுவது, திரைப்படத்தில் நடிப்பது போன்றவை பிடிக்கும்.

ஆனால் சுக்கிரன் கெட்டு இருந்தால் பெண்கள் மூலம் அசிங்க அவமானங்களை அடைவார்.  இவர்களால் அரசியலில் பெரிய பொறுப்பிற்கு வரும் வாய்ப்புகள் குறைவு. தன்னுடைய சந்தோசத்திற்காக பணம் மற்றும் நேரத்தை அதிகம் செலவிடுபவராக இருப்பார்.

நன்றி நண்பர்களே!

Su.Suresh