வணக்கம் நண்பர்களே!
கடன் வாங்குவது கௌரவ குறைவு என்ற காலம் போய், இன்று கடன் இல்லாதவர்களை
பார்பதே அரிதான காரியம் ஆகிவிட்டது. அன்று அவசர தேவைகளுக்கு கடன் வேண்டும் என்றால்
நண்பர்களிடமோ, தங்களிடம் உள்ள பொருட்களை அடமானம் வைத்தோ கடன் பெறலாம். ஆனால் இன்றோ
கிரெடிட் கார்ட்டின் மூலமாக தன்னுடைய அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கு கூட
வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு வந்து விட்டோம். எந்த ஒரு பொருளையும் இந்த மாதம் வங்கி
அடுத்த மாதம் பணம் கட்டிவிடலாம் என்ற நிலை உள்ளது.
கடன் கட்ட முடியாமல் கந்து வட்டி காரர்களுக்கு பயந்த காலம் போய்
கிரெடிட் கார்ட் மூலம் ஏற்ப்பட்ட கடனை அடைக்க முடியாமல் தன்னுடைய அடையாளம் மற்றும் முகவரியை மாற்றி கொண்டு வாழும் பலர் உள்ளனர் இன்று.
கிரெடிட் கார்ட் மூலம் ஏற்ப்பட்ட கடனை அடைக்க முடியாமல் தன்னுடைய அடையாளம் மற்றும் முகவரியை மாற்றி கொண்டு வாழும் பலர் உள்ளனர் இன்று.
பொதுவாக ஒருவருக்கு கடன் வாங்கும் யோகத்தையும், அதனால் ஏற்ப்படும்
பிரச்சினைகளையும் 6ம் பாவம் கொண்டு அறியலாம். 6ம் பாவம் தான் நின்ற நட்சத்திர உப நட்சதிரத்தின்
மூலம் லக்னத்திற்கு 8 மற்றும் 12 பாவங்களை தொடர்பு கொண்டால் கடன் மூலம் பல பிரச்சினைகள் ஜாதகருக்கு
வரும். 8 மற்றும் 12ம் பாவங்கள் 6ம் பாவத்திற்கு சாதகமான பாவங்கள். இந்த தொடர்பு 6ம்
பாவத்தை வளர்க்கவே செய்யும்.
6ம் பாவம், தன் பாவத்திற்கு 8 மற்றும் 12ம்
பாவங்களாகிய 1,5 பாவ தொடர்பினை பெற்று இருந்தால் ஜாதகரால் கடன் வங்க முடியாது.
அப்படியே வாங்கினாலும் உடனேயே அடைத்து விடுவார். அவர் வாங்கிய கடன்களால்
எந்தவிதமான பிரச்சினைகளும் ஜாதகருக்கு ஏற்ப்படாது.
மேலும் 1,5 பாவ தொடர்பினை பெற்று இருக்கும் கிரகங்களின் தசா புத்தி
காலங்களில் அந்த கடனை ஒரு அளவிற்கு அடைத்து விட முடியும்.
பொதுவாக லக்ன பாவத்திற்கு பாதகமான மற்றும் 6ம் பாவத்திற்கு சாதகமான
பாவங்களாகிய 4,8,12 தொடர்புடைய தசா புத்திகளின் கால கட்டங்களில் தற்காலிகமாக ஜாதகர் கடன்
வங்க கூடிய சூழ்நிலை ஏற்ப்படும். அதனை அடைக்க முடியுமா அல்லது அதனால் பிரச்சினைகள்
உண்டா என்பதை 6ம் பாவ தொடர்பு மூலம் அறிந்து கொள்ளலாம்.
நன்றி நண்பர்களே
SU.Suresh
astrovaasan@gmail.com
No comments:
Post a Comment