சனி செவ்வாய் பரிஹார ஸ்தலம் - கூந்தலூர் முருகன் கோவில்
திருக்கூந்தலூர் முருகன் கோவில் அல்லது ஆனந்தவல்லி உடனுறை அருள்மிகு ஜம்புகாரணேசுவரர் என்றழைக்கப்படும் இக்கோவிலின்
முதன்மைக் கடவுள் (சிவன்)
என்றாலும் இங்கு முருகனுக்குத் தனிச் சன்னதி திருக்கோவில் முன்புறம்
அமைந்துள்ளதால் இது முருகன் தலமாக அழைக்கப்படுகிறது.
1600 ஆண்டுகளுக்கு முந்தையது இந்த சிவத்தலம் திருக்கூந்தலூர். திருநாவுக்கரசரும்,
திருஞானசம்மந்தரும் சிவனை வணங்கிய சிவத்தலங்களில் திருக்கூந்தலூரும் ஒன்று ஆகும்.
முந்தய காலத்தில் நாவல் மர வனத்திடையே அமைந்து
இருந்தபடியால் இறைவனை அருள்மிகு ஜம்புகாரணேசுவரர் என அழைக்கப்பட்டதாக வரலாறு.
மேலும் நரி வழிபட்டதாலும் ஜம்புகாரணேசுவரர்
என ஈசன் அழைக்கப்படுவதாக கூறுவதும் உண்டு.
கூந்தலூர் எனும் இந்த பண்டைய சிவத்தலம் , கும்பகோணத்திலிருந்து பூந்தோட்டம் செல்லும் சாலையில் நாச்சியார்கோவிலில்
இருந்து 10 கி.மீ
தொலைவில் அமைந்துள்ளது.
இத்திருக்கோவில் , கூந்தலூர் முருகன் ஆலயம் என உள்ளூர் பக்தர்களால் அழைக்கப்படுகிறது.
தமிழ்க்கடவுள் அருள் தரும் ஆனந்த முருகன் இவ்வாலயத்தில் , நுழைவாயிலின்
ஈசான்ய மூலையில் தேவமயிலுடன் தேவியருடன் நின்ற கோலத்தில் அருள்பாலிப்பதும் ,
ஈசான்யப்பார்வையால் சனீச்வரரை நோக்கி இருப்பது, எங்கும்
காணவியலா பெருங்காட்சி! நானிருக்கிறேன், சனி
பகவான் இடர் துன்பம் களைகிறேன் என பக்தர்களுக்கு அபயம் அழிப்பது போல இருக்கிறது,
முருகப்பெருமானின் திருக்கோலம்!
மேலும், அங்காரக [ செவ்வாய் ]
கிரகத்தின் ஆட்சி வீடான விருச்சிக இராசிக்கு இந்த சனி பகவான் பிரவேசம், செவ்வாய் - சனி பரிவர்த்தனை என்ற ஜாதக ரீதியான அமைப்பில் நிகழ்வதால்,அருணகிரிநாதரால் குமரகுருபரன் என வழங்கப்படும் கூந்தலூர்
திருமுருகன் திருவருளால், இயல்பிலே செவ்வாய் - சனி பரிவர்த்தனை நிவாரண
ஸ்தலமாகத் திகழும் கூந்தலூர் அருள்மிகு முருகன் திருக்கோவிலுக்கு நாம் வாழ்வில் ஒருமுறையேனும் சென்று வருவது சிறப்பு.
1600 ஆண்டுகால பழமைமிக்க இந்த திருக்கோவில் கல்வெட்டுகளை , ஆராய்ந்து
, தொல்லியல் ஆய்வாளர் திரு.குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்கள் அளித்த
ஆய்வுக்குறிப்புகளைப் படித்தறிய கீழே உள்ள தலைப்பை, க்ளிக்
செய்யவும்.
No comments:
Post a Comment