வணக்கம் நண்பர்களே!
10ம் பாவம் தான் நின்ற நட்சத்திர உப நட்சத்திரத்தின் மூலம் 10ம்
பாவத்தினை தொடர்பு கொள்வது ஜாதகரின் தொழிலுக்கு எல்லா வகையிலும் வெற்றியினை தரக்கூடிய
அமைப்பினை தரும்.
10ம் பாவத்தின் 10ம் பாவத் தொடர்பு என்பது 10ம் பாவத்திற்கு 1ம்
பாவமாக வரும். அதனால் இவர்கள் தான் எடுத்துக் கொண்ட எந்த ஒரு வேலையையும் மிக மிக
கவனமாக செய்வார்கள். மேலும் இவர்கள் அதிக அதிகாரம் மற்றும் தலைமைப் பொறுப்புள்ள
பணிகளிலேயே இருப்பார்கள்.
ஜாதகருக்கு கீழ் அதிக நபர்கள் இவரின் பேச்சை கேட்டு வேலை செய்வார்கள்.
உதாரணமாக மாவட்ட ஆட்சியர், தாசில்தார் மற்றும் ஆணையர் போன்ற பதவிகளை இந்த தொடர்பு
கொடுக்கும்.
சுருக்கமாக கூறவேண்டுமானால் 10ம் பாவம் தான் நின்ற நட்சத்திர உபநட்சதிரத்தின்
மூலம் 10ம் பாவத்தை தொடர்பு கொள்ளும் பொழுது ஜாதகர் எந்த தொழிலை செய்தாலும் அதில்
முதல் நபராக செயல்படும் வாய்ப்புகளை பெறுவார்கள்.
ஜோதிடம் பார்க்க மற்றும் சார ஜோதிடம் மூலம் பலன் கூறும் பயிற்சி வகுப்பிற்கு
தொடர்பு கொள்ளவும்.
நன்றி நண்பர்களே!
Su.Suresh
9994690117
கோவை
No comments:
Post a Comment