Thursday, 13 November 2014

பங்கு சந்தை ஜாதகருக்கு வெற்றியா தோல்வியா?



வணக்கம் நண்பர்களே!

ஷேர் மார்க்கெட்டில் முழு நேரமும் ஈடுபட்டு பணம் சம்பாதிப்பது என்பது சுலபமான காரியம் அல்ல. அதற்கு ஜாதகருக்கு கொடுப்பினை வேண்டும்.

பொதுவாக எந்த ஒரு தொழில் செய்தாலும் அதற்க்கு முன்அனுபவம் வேண்டும். ஆனால் ஷேர் மார்க்கெட்டில் ஈடுபடுவதற்கு பணம் இருந்தால் போதும். யாரோ ஒருவரிடம் பணத்தைக் கொடுத்து டிப்ஸ் வாங்கிவிடலாம்.

ஜாதகக் கொடுப்பினை இல்லை என்றால் அவரிடம் பணத்தைக் கட்டி டிப்ஸ் வாங்கினாலும் உங்களுக்கு தோல்விகளே வரும். பொதுவாக கமிசன் ரீதியான தொழிலுக்கு ஜாதகரின் 5ம் பாவத்தை ஆராய வேண்டும். 5ம் பாவம் கெட்டு இருந்தால் கீழ்க்கண்ட வகையில் அவர் பணத்தை இழக்க நேரிடும்.  


·         பரிந்துரை செய்யப்பட்ட விலையை விட அதிக விலைக்கு வங்க நேரிடும்.
·         பயத்தினால் குறைவான லாபத்திற்கு வெளியில் வந்துவிடுவது,
·         ஆப்சன் வர்த்தகத்தில் ஈடுபட்டு பணத்தை இழப்பது
·         வாங்கிய பங்கை நஷ்டத்தில் விற்றவுடன் அடுத்த நிமிடத்தில் இருந்து பங்கின் விலை ஏறும்.
·         எந்த துறை ஜாதகருக்கு ஒத்து வராதோ அதிலேயே தொடர்ந்து ஈடுபடுவார். உதாரணமாக வெள்ளியில் வர்த்தகம் ஜாதகருக்கு சரிவராது என்றால் அதனை விடாமல் செய்து விட்டதை பிடிக்கிறேன் என்று நஷ்டப்படுவார்.  
·         பொறுமை இருக்காது.
·         கையில் உள்ள பணத்தினை அழித்தவுடன் புதிது புதிதாக வர்த்தகம் செய்ய வழிகள் தோன்றும்.
·         அடுத்து ரூ50000 இருந்தால் போதும், மாதம் ரூ100000 சம்பாதிக்கலாம் என்று கூறும் டிப்ஸ் கொடுப்பவரின் அனுபவம் கிடைக்கும்.
·         அவரும் செய்து காட்டுவார். அடுத்த மாதம் நீங்கள் கடன் வாங்கி இதில் ஈடுபடும் பொழுது அவரும் நஷ்டத்தினை கொடுப்பார்.
·         நீங்களும் வேறு வேறு தவறுகளை செய்து இனிமேல் இந்த தொழில் வேண்டாம் என்று முடிவு எடுப்பீர்கள்.
·         ஆனால் மனம் மீண்டும் மீண்டும்???     

நண்பர்களே உங்களுக்கு ஒன்று தெரியுமா? ஜாதகத்தில் 5ம் பாவம் ஷேர் மார்க்கெட் தொழிலை குறிப்பது. பொதுவாக இந்த 5ம் பாவம் என்பது தொழில் ஸ்தானமாகிய 10ம் பாவத்திற்கு மிகவும் பாதகமான பாவம் ஆகும்.

ஆகவே இந்த 5ம் பாவ ரீதியாக தொழில் செய்து சம்பாதித்து ஒரு சமூக அங்கீகாரம் கிடைக்கும் என்பது பெரிய கேள்விக்குறி. முடியவே முடியாது என்று சொல்ல வில்லை. கண்டிப்பாக அதற்கு கொடுப்பினை வேண்டும்.

ஷேர் மார்க்கெட் தொழில் ஈடுபட்டு இதுவரை நஷ்டப்பட்டு கொண்டே  இருபவர்களும், இனிமேல் புதிதாக இதில் ஈடுபடுபவர்களும் தங்களுடைய ஜாதகத்தினை ஆராய்ந்து இந்த துறையில் ஈடுபாடுகள் அல்லது தொடர்ந்து செல்லுங்கள்.  ஏனென்றால் நீங்கள் உழைத்து சம்பாதித்த பணம், அல்லது கடன் வாங்கி ஈடுபட வேண்டி இருந்தால் அது உழைத்து அடைக்க வேண்டிய பணம். எனவே முடியுமா அல்லது முடியாத என்று தெரிந்து கொண்டு ஈடுபடுங்கள்

எத்தனையோ நபர்கள் இந்த ஷேர் மார்க்கெட்டில் பணத்தை இழந்து கொண்டே இருகின்றார்கள். உங்களை நம்பி குடும்பம் உள்ளது. நினைவில் கொள்ளவும்.

ஜோதிட ஆலோசனை பெற விரும்புவர்களுக்கு நான் சார ஜோதிட முறையில்  உங்களுடைய ஜாதகத்தினை கணித்து கீழ்க்கண்ட பலன்களை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்.

·         நீங்கள் ஷேர்மார்க்கெட் தொழில் செய்ய கொடுப்பினை எப்படி உள்ளது?
·         நடைபெறும் தசா புத்திகள் ஒத்துழைப்பு உள்ளதா இல்லையா?
·         அடுத்து வரும் தசா ஒத்துழைப்பு தருமா?
·         உங்களுக்கு தொடர்ந்து நஷ்டங்கள் வந்து கொண்டு இருந்தால், இந்த நிலை மாறுமா அல்லது இதுதான் தொடர்ந்து நடைபெறுமா?
·         உங்கள் ஜாதகத்தின் படி உங்களுக்கு தின வர்த்தகம் சிறப்பா அல்லது முதலீடு சிறப்பா? என்பதை பற்றிய ஆய்வு
·         உங்கள் ஜாதகத்தின் படி உங்களுக்கு பொருள் வணிகம் (Commodity) சிறப்பா?
·         உங்கள் ஜாதகத்திற்கு ஏற்ற செக்டார்ஸ் (Sectors)  என்ன என்ன?

விருப்பம் உடையவர்கள் தொடர்பு கொள்ளுங்கள்

நன்றி!
Su.சுரேஷ்
9952127002



No comments:

Post a Comment