Saturday, 15 February 2014

திருமண நாள் பார்ப்பது எப்படி?


1. முதல் விதி, திருமணம் மல மாதத்தில் இடம்பெறக்கூடாது. (மலமாதம் என்பது இரண்டு அமாவாசை அல்லது இரண்டு பவுர்ணமி ஒரே மாதத்தில் வருவது.)

2. அடுத்ததாக சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, தை, பங்குனி தவிர இதர மாதங்களில் திருமணம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

3. இயன்றவரை சுக்கில பட்ச காலத்திலேயே திருமணம் செய்வது நல்லது என்பது மூன்றாவது விதி.

4. புதன், வியாழன், வெள்ளி போன்ற சுப ஆதிபத்தியமுடைய கிழமைகள் மிகமிக ஏற்றவை. இதர கிழமைகள் அவ்வளவு உகந்தவை அல்ல. இது 4வது விதி.

5. அடுத்த வித... ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு, மீனம் ஆகிய சுப லக்கினங்களில் மட்டுமே திருமணம் நடத்த வேண்டும் என்பது தான்.

6. துவிதியை, திரிதியை, பஞ்சமி, ஸப்தமி, தசமி, திரயோதசி ஆகிய சுப திதிகள் தவிர இதர திதிகளை தவிர்ப்பது ஆறாவது விதி.

7. அடுத்ததாக முகூர்த்த லக்கினத்துக்கு 7ம் இடம் முகூர்த்த நாளன்று சுத்தமாக இருக்க வேண்டும்.

8. அக்கினி நட்சத்திரம், மிருத்யூ பஞ்சகம், கசரயோகங்கள் போன்ற காலகட்டத்தில் திருமணம் நடத்தக்கூடாது. இது 9வது விதி.

9. திருமணத்தின்போது குரு, சுக்கிரன் போன்ற சுப கிரகங்கள் திருமண லக்கினத்துக்கும் மணமக்களின் ஜனன ராசிக்கும் எட்டாம் வீட்டில் இடம் பெற்றிருக்கக்கூடாது என்பது 10ம் விதி.

10. திருமணநாள் மணமக்களின் சந்திராஷ்டம தினமாக இல்லாமல் இருப்பது மிகமிக முக்கியமான விதி.

11. மணமக்களின் ஜனன நட்சத்திர நாளிலும் 3, 5, 7, 12, 14, 16, 21, 23, 2வதாக வரும் நட்சத்திர தினங்களிலும் திருமணம் நடத்தக்கூடாது என்பது 12வது விதி.

12. கடைசியாக மணமக்களின் பிறந்த தேதி அல்லது கிழமைகளிலும் கல்யாணம் பண்ணக்கூடாது.

மல மாதம் மற்றும் விஷ மாசம்

மல மாதம்

ஒரு தமிழ் மாதத்தில் இரண்டு அமாவாசையோ இரண்டு பௌர்ணமியோ வந்தால் அது "மல மாஸம்" எனப்படும்.

ஆனால் சித்திரை,வைகாசி ஆகிய மாசத்தில் இவ்வாரு இரண்டு பௌர்ணமியோ,இரண்டு அமாவாசையோ சம்பவித்தால் இந்த தோஷம் கிடையாது.

விஷ மாசம்

ஒரு தமிழ் மாதத்தில் பௌர்ணமியோ,அமாவாசையோ ஏற்படவில்லை எனில் அது "விஷ மாசம்" எனப்படும்.
ஆனால் சித்திரை,வைகாசி மாதத்திற்கு இந்த தோஷம் இல்லை.

மேற்படி மல மாதங்கள் மற்றும் விஷ மதங்களில் சீமந்தம்,நாமகரணம், போன்ற அதே மாசத்தில் செய்யக்கூடிய சுப நிகழ்ச்சிகளை தவிர நல்ல நாள் பார்த்து வைக்கக்கூடிய கல்யாணம் போன்ற விசேஷங்களை செய்யக்கூடாது.

ஓரையின் பயன்கள்

தின ஓரையில் பயன்கள்

ஒவ்வொரு மாதமும் தினமும் அந்தந்த ஊர்களில் சூரியன் உதிக்கும் நேரம் முதல் ஒவ்வொரு மணி நேரம் வரையில் ஒவ்வொரு கிரகத்தினுடைய ஆதிபத்திய காலம் நடைபெறும். அதைத்தான் அந்த கிரகத்தின் ஆதிபத்தியம் உள்ள ஓரை என்று சொல்வர். 

உங்களுடைய செயல்களை தக்க ஓரையில் முயற்சி செய்து பாருங்கள். வெற்றி உங்கள் வசம்



சூரிய ஓரை: விண்ணப்பம் செய்ய, அதிகாரிகளை சந்தித்தல், மருந்துண்ணல், சொத்துப் பிரிவினை செய்தல், வேலைக்கு முயற்சித்தல், அரசு அனுமதி பெறுதல், பதவி ஏற்றிடல் ஆகியன செய்யலாம்.

சந்திர ஓரை: திருமணத்துக்கு நாள் குறித்தல், பெண் பார்த்தல், ஆடை ஆபரணம் அணிதல், கல்வி கலை கற்றிட ஆரம்பித்தல், தொலைதூரப் பயணம் தொடங்குதல், கால்நடைகள் வாங்குதல் நலம் தரும்.

செவ்வாய் ஓரை: போர்க்கருவிகள் செய்தல், வாகனங்கள் பழுது பார்த்தல், போர் தொடுத்தால், வீடு மனை நிலம் வாங்குதல், விற்றல், மருந்துண்ணல், ஏரிக்கரை அல்லது அணை கட்டுதல் செய்யலாம். சுப காரியங்களைத் தவிர்ப்பது நல்லது.

புதன் ஓரை: ஜோதிட ஆராய்ச்சியில் ஈடுபடுதல், தேர்வு எழுதுதல், போட்டி பந்தயங்களில் பங்கேற்றல், கடிதத் தொடர்பு கொள்ளுதல், புதிய பொருள்களை வாங்குதல், புதிய கணக்கு ஆரம்பித்தல் செய்யலாம்.

குரு ஓரை: புதிய ஆடை ஆபரணம் வாங்குதல், அணிதல், சேமிக்கத் தொடங்குதல், வர்த்தகக் கொள்முதல் செய்தல், விதை விதைத்தல், நாற்று நடுதல், குரு உபதேசம் செய்தல், பெரியோர்களை சந்தித்து ஆசி பெறல் ஆகியவற்றுக்கு ஏற்ற காலம்.

சுக்கிர ஓரை: கலைகளைக் கற்கத் தொடங்குதல், திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தல், காதல் புரிதல், மருந்துண்ணல், பொருள் சேர்த்தல், கடன் வசூல் செய்தல், புதிய ஆடை ஆபரணம் அணிதல் செய்யலாம்.

சனி ஓரை: உழுதல், எருவிடுதல், இரும்பு, மின்சாதனங்களை வாங்குதல், தோப்பு துரவு (கிணறு) அமைத்தல், பயணம் செய்தல் போன்றவை செய்யலாம்.

சுபகாரியங்களுக்குக் கூடாத திதிகள்


கீழ்க்கண்ட நாட்களில் குறிப்பிட்ட திதிகள் வரும்போது அந்த நாட்களில் நற்காரியங்கள் செய்வதை தவிர்ப்பது அவசியம். ஏனெனில் அன்று செய்யப்படும் நற்காரியங்கள் பலன் அளிக்காது.


ஞாயிறு-சதுர்த்தசி
திங்கள்-சஷ்டி
செவ்வாய்-சப்தமி
புதன்-துவிதியை
வியாழன்-அஷ்டமி
வெள்ளி-நவமி
சனி-சப்தமி

நற்பலன் தரும் திதிகள்



கீழ்க்கண்ட  நாட்களில் வரும் திதிகளில் எந்த ஒரு நல்ல காரியம் செய்தாலும் அது வெற்றியே கிட்டும்.

ஞாயிறு-அஷ்டமி
திங்கள்-நவமி
செவ்வாய்-சஷ்டி
புதன்-திரிதியை
வியாழன்-ஏகாதசி
வெள்ளி-திரயோதசி
சனி-சதுர்த்தசி திதி