Thursday, 27 March 2014

எடுத்த செயலை வெற்றியுடன் முடிப்பது எப்படி?


நாம் எல்லோருக்குமே எந்த ஒரு காரியத்தை ஆரம்பித்தாலும் அது வெற்றியுடனே முடிய வேண்டும் என்று விரும்புகின்றோம். ஒருவேளை அந்த செயல் தோல்வியுடன் முடிந்தால் நம்மால் அந்தனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ஏன் இந்த தோல்வி? எளிதாக முடிக்க கூடிய கரியங்கள் கூட எதோ ஒரு காரணத்தால் முடியாமல் போய் விடுகின்றன. . உதரணத்திற்கு ஒரு தேவைக்காக ரூ 50000 தேவை என்று வைத்துக்கொள்ளுங்கள். இதனை பெருவதற்கான செயலில் இறங்கும் போது  நமக்கு தெரிந்தவர்களிடம் அல்லது தெரிந்தவரிடம் கேட்போம். தருகின்றேன் என்று கூறுவார்கள் கடைசி நேரத்தில் கிடைக்காமல் போய்விடும்.

சில நேரத்தில் நகையை அடகு வைக்க கூட முடியாமல் போய்விடும் வீட்டில் ஏற்படும் பிரச்சினைகளால்.  இதற்கு காரணம் அந்த செயலை ஆரம்பித்த நேரம் தான். நம்மை ஆட்டுவிப்பது இந்த பிரபஞ்சத்தில் உள்ள காரணிகள்தான். என்பதனை புரிந்து கொண்டால் இயற்கையை நன்றாக அனுபவிக்க முடியும்.

எந்த ஒரு செயலின் முடிவும் ஆரம்பமும் வீட்டு ஒரு செயலின் ஆரம்பம். இது தான் இயற்கை. சரி எடுத்த நியாயமான செயல்களில் அல்லது ஆசைகளில் வெற்றி பெறுவது எப்படி? முடிந்த மட்டும் ஒரு செயலை தொடங்கும் பொழுது சரியான நேரத்தை கண்டுபிடித்து ஆரம்பித்தால் வெற்றியை பிடிப்பது என்பது எளிது. ஒவோருவருடைய ஜாதகத்திலும் வெற்றியை தரக்கூடிய கிரகம் என்று ஒன்று கண்டிப்பாக இருக்கும்.

அதனை கண்டு பிடித்து தினமும் வரும் ஒரையுடன் பயைன்படுத்த வேண்டும். மேலும் ஒவ்வொரு நாலும் கண்டிப்பாக வெற்றியை தரக்கூடிய ஓரை என்று உண்டு. அவற்றை உங்களின் ஜாதகத்துடன் ஒப்பிட்டு கால நிலைகளுக்கு ஏற்ப பயன்படுதினால் வெற்றி உங்கள் கையில்.

வெற்றியுடன் இந்த  நாளை முடிக்க வாழ்த்துக்கள்.

தொடர்புக்கு : astrovaasan@gmail.com

நன்றி
SU.Suresh

Wednesday, 26 March 2014

ஷேர் மார்க்கெட்டில் ஜெயிக்க முடியுமா?


ஷேர் மார்க்கெட் - கண் முன்னால் இயங்கும் குபேர பத்திரம். Buy or Sell என்ற இரண்டு  முறைகளில் குபேர பத்திரத்தில் இருந்து அள்ளி வரலாம் அல்லது போட்டு  விட்டு வரலாம். அனால் நடப்பதோ போட்டு விட்டு வருபவர்களே அதிகம். காரணம் ஓன்று ஆசை மற்றொன்று விதி.

நீங்கள் கேட்கலாம், விதியை மதியால் வெல்லலாம் என்று. அனால் அதிகமான நபர்களுக்கு ஜாதகத்தில் இந்த  கேள்வியை கேட்பதற்கு மதி வேலை செய்கிறது. அனால் இழப்பதர்கே விதி வழி செய்கிறது.

இங்கே ஷேர் மார்க்கெட்டில் யாரும் ஜெயிக்க முடியாது என்று சொல்ல வரவில்லை. இதில் ஈடுபடும் முன்பு உங்களுக்கு கமிசன் ரீதியான வருமானம் உண்டா? என்று உங்கள் ஜாதகத்தை பார்க்க வேண்டும் என்கிறேன்.

உயர் கணித சார ஜோதிடத்தின் மூலமாக இதனை எளிதாக கண்டு பிடிக்கலாம். நம்முடைய ஜாதகத்தில் 5ம் பாவமானது தான் நின்ற நட்சத்திர உப நட்சத்திரத்தின் மூலமாக 2,4,6,10 பாவங்களை தொடர்பு பெற்று இருந்தால் நீங்கள் ஷேர் மார்கெட்டின் மூலம் மிகப் பெரிய வெற்றி பெறலாம்.

அனால் 8,12 தொடர்பு பெற்று இருந்தால் இழப்பு தன மிச்சம். ஆனால் ஒருவருக்கு முதலீடு சிய 12ம் பாவம் அனுமதித்தல் நீங்கள் Intraday செய்யாமல் Investor ஆக மாறி விடலாம். மேலும் உங்களுக்கு சாதகமான Sectors எது என்பதனை உங்களுடைய ஜாதகத்தில் இருந்து கண்டு பிடிக்க முடியும். அவற்றில் மற்றுமே நீங்கள் முதலீடு செய்து வந்தால் இழப்புகளை குறைக்கலாம்.

ஷேர் மார்க்கெட்டில் நீங்கள் யார் என்பதை தெரிந்து கொள்ள அதாவது குபேர பத்திரத்தில் சொத்தை விற்று போட்டு விட்டு வருவீர்களா அல்லது அங்கு இருந்து உங்கள் வீட்ற்றிக்கு எடுத்து வரப்போகின்றீர்களா 
என்பதை உங்கள் ஜாதகத்தில் மூலம் தெரிந்து கொள்ள விரும்பினால் என்னை தொடர்பு கொள்ளவும்.

என்னால் உங்களுடைய ஜாதகத்தை  உயர் கணித ஜோதிட முறைகள் ஆராய்ந்து ஒரு நல்ல வழி காட்டுதலை கொடுக்க முடியும்.  உங்களுடைய ஜாதகத்தி பற்றி தெரிந்து கொள்ள விரும்பினால் தொடர்பு கொள்ளவும்.

  Email: astrovaasan@gmail.com

நன்றி
SU.Suresh

Monday, 24 March 2014

கிரக காரகங்கள் - சூரியன்


சூரியனை மையமாக வைத்து அணைத்து கிரகங்களும் சுற்றி வருவதால் இதனை கிரகங்களின் தலைவன் என அழைக்கின்றோம்.

சூரியனின் முக்கியமான காரகங்கள்.

1. தந்தை
2. மாமனார்
3. அரசியல் தலைவர்கள்
4. கம்பீரம்
5. உயர் அதிகாரி
6. கம்பீரம்
7. தலை,மூளை,இருதயம்
8. எலும்புகள்
9. உடலின் உஷ்ணம்
10. கோதுமை
11. சிவப்பு நிறம்
12. மாணிக்கம்
13. சிவன்
14. கிழக்கு திசை

ஒருவருக்கு சூரியன் ஜாதகத்தில் கெட்டு இருந்தால் மேற்கண்ட கரகங்கள் ரீதியாக பிரச்சினைகள் உண்டு.


நன்றி
சு.சுரேஷ்
astrovaasan@gmail.com