5ம் பாவம் தான் நின்ற நட்சத்திர உப நட்சத்திரம் மூலம் 2ம்
பாவத்தினை தொடர்பு கொள்ளுவது ஷேர் டிரேடிங் செய்வதற்கு சிறப்பான தொடர்பு என்றும் ஷேர்
மார்க்கெட் தொழிலின் மூலம் ஜாதகரின் தன நிலை உயரும் என்று பாத்தோம்.
இந்த பதிவில் 5ம் பாவம் தான் நின்ற நட்சத்திர உப நட்சத்திரம்
மூலம் 3ம் பாவத்தை தொடர்பு கொள்ளும்பொழுது உண்டாகும் விளைவுகளை பார்ப்போம். ஜாதகரின்
5ம் பாவம் 3ம் பாவத்தினை தொடர்பு கொண்டு இருந்தால் ஜாதகருக்கு ஒரு அளவிற்கு
வருமானத்தையும் திருப்தியையும் தரக்கூடிய ஒரு அமைப்பை தரும்.
5ம் பாவத்தின் 3ம் பாவ தொடர்பு ஜாதகருக்கு ஷேர்
மார்க்கெட் பற்றிய நூல்களை எழுதகூடிய அமைப்பை தரும். ஜாதகருக்கு குருவும்,புதனும் சாதகமாக
இருந்தால் நூல்களை எழுதுவதன் மூலம் நல்ல பெயரையும், புகழையும் பெறுவார். ஷேர்
மார்க்கெட் பற்றிய விசயங்களை எழுதுவதன் மூலமும், ஷேர் புரோக்கர் தொழில் செய்வதன் மூலமும்
வருமானத்தை பெறுவார் ஜாதகர்.
மேலும் ஜாதகர் ஷேர் மார்க்கெட் பற்றிய வகுப்புகளை
எடுப்பதற்காக ஒவ்வொரு ஊருக்கும் சென்று வரக்கூடிய அமைப்பை பெற்று இருப்பார். அதிகமான
விளம்பர பிரியராக இருப்பார். தன்னுடைய வகுப்புகள் பற்றிய செய்திகளையும், பரிந்துரைகளின் வெற்றி பற்றியும்
அதிகமான விளம்பரங்களை செய்து அதன் மூலம் லாபம் அடைவார்.
ஜாதகருக்கு சந்தரன் 3ம் பாவத்துடன் தொடர்பு கொண்டு
இருந்தால் உற்சாகம் மூட்டக்கூடிய வகையில் தன்னுடன் தொடர்பு கொள்ளுபவர்களுடன் பேசி
ஷேர் மார்க்கெட்டுக்கு அவர்களை கொண்டு வந்து விடுவார்.
செவ்வாய் 3ம் பாவத்தினை தொடர்பு கொண்டு இருந்தால்
தைரியம் அதிகமாகவும், போலியான ஆவணங்கள் மூலம் மற்றவரை ஏமாற்ற கூடிய உள்ள நபராகவும்
இருபார்.
இராகு 3ம் பாவத்துடன் தொடர்பு கொண்டு இருந்தால்
சட்டதிற்கு புறம்பான வகையில் அந்நிய நபர்களுடன் தொடர்பு கொண்டு ஷேர்மார்க்கெட்டின்
போக்கினை அறிந்து கொண்டு லாபம் அடைவார்.
சனி 3ம் தொடர்பு கொண்ட நபர் ஷேர் மார்க்கெட்டில்
ஈடுபடும்பொழுது அடிக்கடி தான் கொண்ட முடிவை மாற்றி கொள்ளுபவராக இருப்பார்.
இவருக்கு நிலையான ஒரு முடிவு எடுக்க தெரியாது. பயந்த மனநிலை உடையவர். சிறிய லாபம்
வந்தாலும் அல்லது சிறிய நஷ்டம் வந்தாலும் அவசரப்பட்டு பயத்தினால் வெளியேறி
விடுவார். உறுதியான வணிகமே இவரிடம் பார்க்க முடியாது.
கேது 3ம் பாவ தொடர்பு கொண்ட நபர் அடுத்தவரின்
கணக்கில் டிரேட் செய்து நஷ்டம் அடைந்து மாட்டி கொள்ளுவார். இதன் மூலம் கிரிமினல்
வழக்குகளில் சிக்கி கொள்ளுவார். போலியான செக் கொடுப்பது, போலியான ஆவாணங்கள்
தயாரிப்பது ஜாதகருக்கு கைவந்த கலையாக இருக்கும்.
சுக்கிரன் 3ம் பாவ தொடர்பு கொண்ட நபர் சந்தோசமான
முறையில் புரோக்கர் ஆபீஸ் நடத்துவார். அங்கு வர்த்தகத்தில் ஈடுபடும் நபர்கள்
சந்தோசமாக இருக்கும்படி தன்னுடைய நிறுவனத்தை அமைத்து இருப்பார். ஜாதகர் பெண்கள்
தொடர்பு கொண்டவராகவும், தன்னுடைய நிறுவனத்தில் பெண்களை அதிகமாக வேலைக்கு அமர்த்தியும்
இருப்பார்.
நன்றி நண்பர்களே!
Su.சுரேஷ்
astrovaasan@gmail.com
No comments:
Post a Comment