வணக்கம் நண்பர்களே!
10ம் பாவம் தான் நின்ற நட்சத்திர உப நட்சத்திரத்தின் மூலம் 11ம்
பாவத்தினை தொடர்பு கொள்வது ஜாதகரின் தொழிலுக்கு பாதகமான பலனை தராது. இந்த தொடர்பு
10 பாவத்திற்கு இரண்டாம் பாவமாக வரும். மேலும் 2 மற்றும் 6ம் பாவங்களுக்கும் இந்த
11ம் பாவம் என்பது ஒரு நடுநிலையான அமைப்பினை தரும்.
10ம் பாவத்தின் 11ம் பாவத் தொடபு ஜாதகருக்கு மகிழ்ச்சி, சந்தோஷம்
போன்றவற்றை கிடைக்கச் செய்யும். பொதுவாகவே எந்த பாவம் 11 பாவத்தினை தொடர்பு கொள்ளுகின்றதோ
அந்த பாவக ரீதியாக ஜாதகர் திருப்தியினை அனுபவிப்பார்.
எனவே இந்த தொடர்பு ஜாதகரை திருப்தி அடையச் செய்யும். மேலும் ஜாதகர்
தன்னுடைய தொழிலில் தான் அடைந்த வளர்ச்சியினை கண்டு திருப்தி அடைந்து அந்த தொழிலை
அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல மாட்டார்.
அதாவது 10ம் பாவம் தான் நின்ற நட்சத்திர உப நட்சதிரத்தின் மூலம் 11ம்
பாவம் தொடர்பு கொண்ட நபர்கள் தன்னுடைய தொழிலை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் வளர்க்க
விரும்ப மாட்டார்.
ஜோதிடம் பார்க்க மற்றும் சார ஜோதிடம் மூலம் பலன் கூறும் பயிற்சி வகுப்பிற்கு
தொடர்பு கொள்ளவும்.
நன்றி நண்பர்களே!
Su.Suresh
9994690117
கோவை
No comments:
Post a Comment