வணக்கம் நண்பர்களே!
10ம் பாவம் தான் நின்ற நட்சத்திர உப நட்சத்திரத்தின் மூலம் 12ம்
பாவத்தினை தொடர்பு கொள்வது ஜாதகரின் தொழிலுக்கு சாதகமான பலனை தரும். ஒரு குறிப்பிட்ட பாவத்தில் இருந்து
வரும் அதன் மூன்றாம் பாவம் கேள்விக்குரிய பாவத்தினை பல மடங்கு வளர்த்து விடும்.
10ம் பாவத்தின் 12ம் பாவத் தொடபு ஜாதகர் ஒன்றுக்கும் மேற்பட்ட
தொழிலில் ஈடுபடுவதை குறிக்கும். எனவே ஜாதகர் அதிகப்படியாக வேலை செய்ய வேண்டி
இருப்பதனால் உடல் சோர்வு மற்றும் மனச் சோர்வு என்பது கண்டிப்பாக இருக்கும்.
12ம் பாவ காரகத்துவத்தில் விரயம் மற்றும் இழப்பு என்பவையும் உள்ளன.
எனவே ஒன்றுக்கு மேற்ப்பட்ட தொழிலை கொடுத்தாலும் விரயம் மற்றும் இழப்புகளை ஜாதகர்
தான் செய்யும் தொழிலில் சந்திக்க வேண்டி வரும்.
இரண்டு தொழிலில் ஈடுபடும் ஜாதகருக்கு 12ம் பாவமும் வலுவாக 2,4,6,10
பாவங்களை தொடர்பு கொண்டு இருந்தால் இரண்டாவது தொழில் மூலம் நல்ல வருமானம்
உண்டு.
ஜோதிடம் பார்க்க மற்றும் சார ஜோதிடம் மூலம் பலன் கூறும் பயிற்சி வகுப்பிற்கு
தொடர்பு கொள்ளவும்.
நன்றி நண்பர்களே!
Su.Suresh
9994690117
கோவை
No comments:
Post a Comment