வணக்கம் நண்பர்களே!
ஒருவருடைய பேச்சு என்பது 2ம் பாவம் தான் நின்ற
நட்சத்திர உப நட்சத்திரத்தின் மூலம் ஜாதகருக்கு சாதக பாதகத்தை அளிக்கிறது. பொதுவாக
பேச்சு என்பது அடுத்தவர்களை மகிழ்விக்கும்படியாகவும், அல்லது உள்ளதை உள்ளபடி
நடந்த, நடக்க போகின்ற விசயங்களை சொல்வதாகவும் இருக்கும்.
2ம் பாவம் 3,7,11 பாவங்களை தொடர்பு கொள்ளும்
பொழுது ஜாதகர் அடுத்தவர்களை மகிழ்விக்கும் படியாக பேசும் திறமை பெற்று இருப்பார்.
3,7,11 பாவங்கள் பொருளாதார விசயங்களில் 2ம் பாவத்திற்கு மத்திமமான பாவங்கள்
ஆகும். எனவே இந்த 3,7,11 பாவத் தொடர்புகளின் மூலமாக ஜாதகருக்கு வருமானமும் உண்டு.
எனவே பேச்சாளர்களுக்கும், டிவியில் நிகழ்சிகளை தொகுத்து வழங்குபவர்களுக்கும் 2ம்
பாவம் 3,7,11 பாவதொடர்பு கொள்வது சிறப்பு.
ஆனால் மக்களுக்கு உள்ளதை உள்ளபடி கூறுகின்ற
மக்கள் தொடர்பு அதிகாரி, செய்தி வாசிப்பவர்கள், ஆசிரியர்கள் போன்றவர்களுக்கு 2 ம்
பாவம் 2,4,6,10 தொடர்பு கொண்டு இருப்பது சிறப்பு. இந்த தொடர்பினால்
ஜாதகருக்கு அடுத்தவரை
மகிழ்விக்கும்படியாக, கவர்ச்சியாக பேச முடியாது.
மேலும் 9ம் பாவமும் 3,7,11 தொடர்பு கொண்டு
இருப்பது சிறப்பு. கிரகங்களில் புதன்(நியாபக சக்தி,புள்ளி விபரம்),சுக்கிரன்(கவர்ச்சி)
நல்ல முறையில் 1,3,7,9,11 பாவ தொடர்புகள் பெற்று இருப்பது மேலும் சிறப்பு.
நன்றி நண்பர்களே!
Su.Suresh
astrovaasan@gmail.com
"2ம் பாவம் தான் நின்ற நட்சத்திர உப நட்சத்திரத்தின் மூலம்" எனக்கு இது புரியவில்லை அதனால உங்க என்தோ ஒரு கட்டுரையும் புரியவில்லைங்க.... எனக்கு விளக்க முடியுமா?
ReplyDelete2ம் பாவம் தான் நின்ற நட்சத்திர உப நட்சத்திரம் மூலம் என்றால்... நான் ஒரு உதாரணத்துக்கு சொல்கிறேன், மீனத்தில் இரண்டில் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் செவ்வாய் இருக்கிறது என்றால் உத்திரட்டாதி நட்சதிராதிபன் சனி பகவான், உபநட்சத்திராதிபதி சுக்கிரன் இருக்காங்க... அப்போ நான் இதில் யாரை கொண்டு பார்க்கணும் யார் மேல்சொன்ன எந்த பாவகங்களை தொடர்பு கொள்கிறார்னு பாக்கணும் ஐயா ? சனிபகவானையா? சுக்கிர பகவானையா? ஆப்படியே வைத்தாலும் செவ்வாய் இரண்டில் அமர்ந்ததால் இப்படி பார்க்கிறோம் அப்போ அதே இரண்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட கிரகம் அமர்ந்தால் எதை வைத்து பார்ப்பதுங்க? தயவுகூர்ந்து விளக்கம் தாருங்கள்... ஓரிரு வரி சொன்னால் கூட போதுமானது... தங்கள் பதிவுகளை படித்து தெரிந்துகொள்ள இந்த அடிப்படை விளக்கம் தேவையானதாக இருக்கிறது ஐயா.. நன்றிங்க.
Please check this link
Deletehttp://jothidaanubavam.blogspot.in/2014/07/blog-post_23.html
நன்றிங்க... :)
ReplyDelete