பொதுவாக கமிசன் ரீதியான தொழிலுக்கு ஜாதகரின் 5ம்
பாவத்தை ஆராய வேண்டும். 6ம் பாவம் என்பது உடல் உழைப்பின் மூலம் கிடைக்கும்
வருமானத்தையும் மற்றவரிடம் வேலை
பார்ப்பதையும் குறிக்கும்.
ஆனால் 5ம் பாவம் என்பது 6ம் பாவத்திற்கு 12ம் பாவமாக வருவதால் அடுத்தவரிடம் அடிமை வேலை செய்யாமல் யாருக்கும்
கட்டுப்படாமல் இருப்பதை குறிக்கும்.
சிரமம் இல்லாமல் உட்கார்ந்த இடத்திலேயே சம்பாதிக்க கூடிய ஷேர்
டிரேடிங் என்று அழைக்க கூடிய கமிசன் தொழில் 5ம்
பாவத்தில் உள்ளது. ஷேர் மார்க்கெட்டில் வாங்குவது அல்லது விற்பது (sell or
buy) என்ற இரண்டு முறைகள் தான் உள்ளது. இதில் சம்பாதித்து உயர்ந்தவர்கள்
வெகு சிலரே.
பெரும்பான்மையானவர்கள் தங்களுடைய சொத்துகளை இழக்கவே செய்கின்றனர். வாங்குவது
விற்பது தவிர வேறு முறைகளும் உள்ளன பணம் சம்பாதிப்பதற்கு. அதாவது ஷேர்
மார்க்கெட்டின் நெளிவு சுளிவுகளை வகுப்புகள் நடத்துவதன் மூலமும், டிப்ஸ்
என்று சொல்லக்கூடிய எதை வாங்க வேண்டும் விற்க வேண்டும் என்பதனை மாத மாதம் பணம்
வாங்கிக்கொண்டு அடுத்தவர்களை வழிநடத்தி வருமானம் ஈட்டுபவர்களும் உண்டு. மேலும்
ஷேர் புரோக்கர் ஆபீஸ் வைத்து கொண்டு கமிசன் பெறுவார்கள்.
அந்த உடல் உழைப்பு இல்லாமல் வருமானத்தையோ இழப்புகளையோ தரக்கூடிய 5ம் பாவம்
தான் நின்ற நட்சத்திர உப நட்சத்திரம் மூலம் 1 முதல் 12
பாவங்களை தொடர்பு கொள்ளுவதன் மூலம் ஜாதகருக்கு என்ன தர போகின்றது
என்பதை பார்க்கலாம்.
நன்றி நண்பர்களே!
Su.Suresh
astrovaasan@gmail.com
No comments:
Post a Comment