வணக்கம் நண்பர்களே!
5ம் பாவம் 11ம் பாவத்துடன் தொடர்பு கொண்டு இருந்தால், அந்த
ஜாதகருக்கு அரசியல் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியான வகையில் அமையும் என்று
பார்த்தோம்.
இங்கு 5ம் பாவம் தான் நின்ற நட்சத்திர உபநட்சத்திரம் மூலம் 12ம்
பாவத்தினை தொடர்பு கொள்ளும் போது உண்டாகும் பலன்களை பார்ப்போம்.
5ம் பாவம் 12ம் பாவ தொடர்பு கொள்ளும் பொழுது ஜாதகர் அரசியல் மூலம் அனைத்து
விதமான பிரச்சினைகளையும் அனுபவிப்பார். இவருடைய பேச்சின் மூலமாக எதிர்மறையான
விளைவுகளை சந்திப்பார்.
அரசியல் மூலமாக வலி மற்றும் வேதனைகளை அடைவார். 7ம் பாவத்திற்கு 6ம் பாவமாக 12ம் பாவம் அமைவதால் மக்கள் மற்றும் தொண்டர்களுக்கு அடங்கியே இருக்க
வேண்டிய சூழ்நிலையில் இருப்பார்.
அனைத்துவிதமான விரயங்களையும் அரசியல் மூலமாக அடைவார்.
இதுவரை 5ம் பாவம் அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு 1 முதல் 12 பாவங்களுடன்
தொடர்பு கொள்ளும் பொழுது ஏற்படும் விளைவுகளை பார்த்தோம். இத்துடன் அரசியல்
பதிவுகள் நிறைவு அடைகிறது.
நன்றி நண்பர்களே!
Su.Suresh
No comments:
Post a Comment