ஓம்
வணக்கம்
நண்பர்களே!
செவ்வாய் சுக்கிரானுடன் இணைந்து இருந்தாலோ அல்லது சுக்கிரனுக்கு
2,5,9ல் இருந்தாலோ கீழ்க்கண்ட பலன்களை ஜாதகர் பெறுவார். இங்கு சுக்கிரன் என்ற
கிரகம் ஜாதகரின் மனைவியை குறிப்பது.
இந்த இணைவு கொண்ட ஜாதகரின் மனைவி அதிக கோபம்
கொண்டவராக இருப்பார். முன்கோபி. கணவனை அடக்கி ஆள விருப்பம் உடையவர். உடம்பில் அதிக
உஷ்ணம் இருக்கும். அதிக தைரியம் மற்றும் சண்டைகளில் விருப்பம் உடையவராகவும்
இருப்பார். தன்னுடைய கணவருடன் அதிக விவாதங்கள் செய்பவராகவும் இருப்பார்.
குறிப்பு: நாம் ஒருவருக்கு அமையும் மனைவியினை ஆணின்
ஜாதகத்தில் சுக்கிரனை கொண்டு பார்க்கிறோம். இதே போல் பெண்ணின் ஜாதகத்தில் கணவனைக்
குறிக்கும் கிரகம் செவ்வாய். அடுத்ததாக செவ்வாய் கொண்டுள்ள தொடர்புகளை கொண்டு ஒரு
பெண்ணிற்கு அமையும் கணவனைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
நன்றி நண்பர்களே!
SURESH
99946 90117
No comments:
Post a Comment