வணக்கம் நண்பர்களே!
முந்தய பதிவில் 5ம் பாவம் தான் நின்ற நட்சத்திர உப நட்சத்திரம் மூலம் 8ம் பாவத்தை தொடர்பு கொள்வது ஒரு கெடுதலான அமைப்பு என்றும் இந்த அமைப்பினை உடைய
ஜாதகர் 5ம் பாவ ரீதியான தொழில்களை செய்தால் அதிக இழப்புகளை சந்திக்க வேண்டி இருக்கும்
என்று பார்த்தோம்.
சார ஜோதிட முறையில் ஷேர்மார்க்கெட்டில் ஈடுபட்டு
வருபவர்களின் ஜாதகத்தில் 5ம் பாவம் 9ம் பாவத்தினை தொடர்பு கொண்டு இருந்தால் அதனால் ஏற்ப்படும்
விளைவுகள் பொருளாதார ரீதியாக சாதகமா? பாதகமா? அல்லது ஷேர்மார்க்கெட்டில் எப்படி ஈடுபடவேண்டும் என்று இந்த
பதிவில் பார்ப்போம்.
5ம் பாவம் தன்னுடைய நட்சத்திர உப நட்சத்திர
தொடர்பின் மூலம் 9ம் பாவத்தினை தொடர்பு கொள்வது 5ம் பாவத்திற்கு
ஒரு சாதகமான அமைப்பாக இருந்தாலும் தொழில் ஸ்தானமாகிய 10 பாவத்திற்கு 12ம் பாவமாக
வருவதால் ஷேர் மார்க்கெட் துறையில் நீடித்து தொழில் செய்ய முடியாது.
இந்த தொடர்பு
உள்ளவர்கள் ஷேர் மார்க்கெட் துறையில் ஆர்வலர்களாக இருப்பார்கள். இந்த துறையை
ஆராய்ச்சி நோக்கில் அணுகுவார்கள். தன்னுடைய ஆராய்ச்சி முடிவுகளை எந்தவித பொருளாதார
நோக்கமும் இல்லாமல் அனைவருடனும் பகிர்ந்து கொள்ளும் திறமையினை பெற்றவர்.
இவர்கள் இந்த
துறையில் ஆன்மீகத்தினையும் ஈடுபடுத்துவார்கள். ஜோதிடம் மற்றும் ஆன்மீகத்தினை
அதிகம் நம்புவார்கள். அவற்றை ஷேர் மார்க்கெட்டில்
பயன் படுத்துவார்கள். அவர்களுக்கு அதிக நண்பர்கள் இந்த துறையில்
இருப்பார்கள். அவர்கள் மத்தியல் இவருக்கு நல்ல புகழ் இருக்கும் இந்த துறையில்.
5ம் பாவம் 9ம் பாவத்தினை தொடர்பு
கொண்ட நபர்கள் இந்த துறையில் தின வர்த்தக முறையில் ஈடுபடாமல் இருப்பதே சிறப்பு.
நன்றி நண்பர்களே!
Su. Suresh
astrovaasan@gmail.com
No comments:
Post a Comment