வணக்கம் நண்பர்களே!
முந்தய பதிவில் 5ம் பாவம் தான் நின்ற நட்சத்திர உப நட்சத்திரம் மூலம் 11ம் பாவத்தை தொடர்பு கொண்ட நபர்கள் தொழில் முறையாக செய்யாமல் பங்குசந்தை ஆலோசகராக
செயல்பட்டால் வெற்றி மற்றும் பொருளாதார உயர்வு கிடைக்கும் என்று பார்த்தோம்.
சார ஜோதிட முறையில் ஷேர்மார்க்கெட்டில் ஈடுபட்டு
வருபவர்களின் ஜாதகத்தில் 5ம் பாவம் 12ம் பாவத்தினை தொடர்பு கொண்டு இருந்தால் அதனால் ஏற்படும்
விளைவுகள் பொருளாதார ரீதியாக சாதகமா? பாதகமா? அல்லது ஷேர்மார்க்கெட்டில் எப்படி ஈடுபடவேண்டும் என்று இந்த
பதிவில் பார்ப்போம்.
5ம் பாவம் தன்னுடைய நட்சத்திர உப நட்சத்திர
தொடர்பின் மூலம் 12ம் பாவத்தினை தொடர்பு கொள்வது ஷேர்மார்க்கெட் தொழில்
செய்பவர்களுக்கு பாதகமான அமைப்பை தரும். ஏனென்றால் 12 ம் பாவ தொடர்பு 5ம்
பாவத்திற்கு 8ம் பாவமாக வரும். எனவே லக்னம் என்ற ஜாதகருக்கு இந்த தொடர்பினால்
பிரச்சினைகளே அதிகம் வரும்.
லக்னபாவம் என்பது ஜாதகருடைய தனித்தன்மையை, சுய
அறிவினை வெளிப்படுத்துவது ஆகும். ஆனால் இந்த 12ம் பாவத்தொடர்பு ஜாதகரின்
சிந்திக்கும் திறனை, தனித்தன்மையை இந்த பாவ ரீதியல் இழப்பதை குறிக்கும்.
இவரால் எந்த ஒரு முடிவையும் சுயமாக எடுக்க
முடியாது. எனவே இந்த துறையில் ஈடுபடும் ஜாதகரால் வெற்றி பெற முடியாது. ஒருவேளை
ஜாதகரின் லக்ன பாவம் 7,11 பாவ தொடர்புகள் பெற்று இருந்தால் 5ம் பாவத்தின் 12ம் பாவ
தொடர்பு ரீதயாக வரும் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும்.
எனவே இந்த 12ம் பாவ தொடர்பு ஜாதகருக்கு
பாதகமானது. இந்த துறையில் ஈடுபடாமல் இருப்பதே சிறப்பு.
நன்றி நண்பர்களே!
Su. Suresh astrivaasan@gmail.com
No comments:
Post a Comment