வணக்கம் நண்பர்களே!
முந்தய பதிவில் 5ம் பாவம் தான் நின்ற நட்சத்திர உப நட்சத்திரம் மூலம் 6ம்
பாவத்தை தொடர்பு கொள்வது சாதகமானது
இன்றும் இந்த ஷேர்மார்க்கெட் தொழிலை தொழிலாகவே நீடித்து செய்ய இயலும் மற்றும் நல்ல
வருமானமும் உண்டு என்று பார்த்தோம்.
சார ஜோதிட முறையில் ஷேர்மார்க்கெட்டில் ஈடுபட்டு வருபவர்களின்
ஜாதகத்தில் 5ம் பாவம் 7ம் பாவத்தினை தொடர்பு கொண்டு இருந்தால் அதனால் ஏற்ப்படும் விளைவுகள்
பொருளாதார ரீதியாக சாதகமா? பாதகமா? அல்லது ஷேர்மார்க்கெட்டில் எப்படி ஈடுபடவேண்டும் என்று இந்த பதிவில்
பார்ப்போம்.
ஜாதகருக்கு 5ம் பாவம் 7ம் பாவத்தினை தொடர்பு கொண்டு இருப்பது சிறப்பான அமைப்பு ஆகும்.
மேலும் இந்த தொடர்பு நல்ல வருமானத்தினை இதில் ஈடுபடுவர்களுக்கு தரும். மேலும் 7ம்
பாவம் 2,6,10ம் பாவங்களுக்கு சாதகமான பாவம் ஆதலால் இந்த தொழில் ஈடுபடும் ஜாதகர் நீண்ட
நாட்களுக்கு வர்த்தகம் செய்ய விதி கொடுப்பினை உள்ளது.
7ம் பாவம் என்பது பொதுஜன தொடர்பு மற்றும் மக்கள் கூட்டத்தையும் குறிப்பதால்
இவரை சுற்றி கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த 7ம் பாவ தொடர்பு வாடிக்கையாளர்களுக்கு
அதிக சாதகமாக இருக்கும். இவர் தன்னிடத்தில் உதவி வேண்டுபவர்களுக்கு குறைவான
சேவைக்கட்டணம் வாங்குவார்.
7ம் பாவ தொடர்பு கொண்ட ஜாதகர், மற்றவருக்கு ஆலோசனைகள் கூறுவதன் மூலம்
பிரச்சினைகள், தொழில் நெருக்கடி போன்றவற்றில் சிக்கிக்கொள்ள மாட்டார். இவர்
தன்னுடைய வாடிக்கையாளர்களிடம் எப்பொழுதுமே இன்முகத்துடன் பழகுவார். 5ம் பாவத்தின் 7ம்
பாவதொடர்பு ஜாதகருக்கு இந்த தொழில் மூலம் சமூக அந்தஸ்து கிடைக்கச்செய்யும்
ஜாதகர் தன்னுடைய அனைத்து வாடிக்கையாளர்களிடமும் சரிசமாக பழகுவார். அவர்களை
ஏமாற்றவோ, கைவிடவோ மாட்டார். எனவே இந்த 5ம் பாவத்தின் 7ம் பாவத் தொடர்பு
ஷேர்மார்க்கெட் தொழிலை செய்வதற்கு நல்லதொரு அமைப்பை கொடுக்கும்.
நன்றி நண்பர்களே!
Su. Suresh astrovaasan@gmail.com

No comments:
Post a Comment