வணக்கம் நண்பர்களே!
முந்தய பதிவில் 5ம் பாவம் தான் நின்ற நட்சத்திர உப நட்சத்திரம் மூலம் 7ம் பாவத்தை தொடர்பு கொள்வது சாதகமானது என்றும் இந்த ஷேர்மார்க்கெட் தொழிலை
தொழிலாகவே நீடித்து செய்ய இயலும் மற்றும் நல்ல வருமானமும் உண்டு என்று பார்த்தோம்.
சார ஜோதிட முறையில் ஷேர்மார்க்கெட்டில் ஈடுபட்டு
வருபவர்களின் ஜாதகத்தில் 5ம் பாவம் 8ம் பாவத்தினை தொடர்பு கொண்டு இருந்தால் அதனால் ஏற்ப்படும்
விளைவுகள் பொருளாதார ரீதியாக சாதகமா? பாதகமா? அல்லது ஷேர்மார்க்கெட்டில் எப்படி ஈடுபடவேண்டும் என்று இந்த
பதிவில் பார்ப்போம்.
5ம் பாவம் தன்னுடைய நட்சத்திர உப நட்சத்திர தொடர்பின் மூலம் 8ம்
பாவத்தினை தொடர்பு கொள்வது ஒரு கெடுதலான அமைப்பாகும். இந்த அமைப்பினை உடைய ஜாதகர்
5ம் பாவ ரீதியாக தொழில்களை செய்தால் அதிக இழப்புகளை சந்திக்க வேண்டி இருக்கும். இந்த
தொடர்பு 70% அளவிற்கு சாதகமாக இல்லை.
9ம் பாவத்திற்கு 8ம் பாவமானது 12ம் பாவமாக வருவதால் 5 பாவ ரீதியான
செயல்களுக்கு தெய்வ அனுக்ரகம் கிடைக்காது. எனவே இழப்புகள் தான் மிச்சமாக இருக்கும்.
ஒருவேளை 5ம் பாவம் 2 மற்றும் 8ம் பாவங்களை தொடர்பு கொண்டு இருந்தாலோ அல்லது லக்ன பாவம்
3,7,11ம் பாவங்களை வலுவுடன் தொடர்பு கொண்டு இருந்தால் 8ம் பாவத்தொடர்பினால் வரும் பிரச்சினைகள் ஒரு அளவிற்கு
கட்டுக்குள் இருக்கும்.
ஆனால் ஜாதகருக்கு 5ம் பாவம் 8ம் பாவத்தினை மட்டும் தொடர்பு கொண்டு இருந்தால்
தன்னை இந்த தொழிலில் நிலை நிறுத்திக் கொள்ள குறுக்கு வழிகளை தேர்ந்தெடுத்து அதர்மமான
முறையில் செயல் படுவார். ஆனால் எந்த வழியில் முயற்சி செய்தாலும் தோல்வி மற்றும்
அசிங்கங்களையே ஜாதகர் பெறுவார்.
மேலும் இவருடன் தொடர்பில் உள்ள நபர்கள் ஷேர்
மார்க்கெட் தொழிலில் தோல்வி அடைந்தவர்கலாகவே இருப்பார்கள். பொதுவாகவே இவரால்
சந்தையின் போக்கினை கவனிப்பதோ, அனுமானிப்பதோ வராது.
இவருடைய பெரும்பாலான வர்த்தகங்களை மார்க்கெட்
செல்லும் எதிர் திசையில் சென்று செய்து நஷ்டத்தினை பெறுவார்.
எனவே 5ம் பாவம் தான் நின்ற நட்சத்திர உப
நட்சத்திரத்தின் மூலம் 8ம் பாவ தொடர்பு கொண்ட நபர்கள், அவர்களுடைய லக்னம் மற்றும்
தசா புத்திகள் சாதகம் இல்லாத பட்சத்தில் இந்த துறையை விட்டு வெளியே சென்று தங்களுடைய
ஜாதகத்தினை நன்றாக ஆராய்ந்து தங்களுக்கு எந்த தொழிலில் வருமானம் வரும் என்பதனை
அறிந்து கொண்டு அதனை செய்து வெற்றி பெற முயற்சி செய்வது சிறப்பு.
நன்றி நண்பர்களே!
Su. Suresh
astrovaasan@gmail.com
No comments:
Post a Comment