வணக்கம் நண்பர்களே!
முந்தய பதிவில் 5ம் பாவம் தான் நின்ற நட்சத்திர உப நட்சத்திரம் மூலம் 10ம் பாவத்தை தொடர்பு கொண்ட நபர்களுக்கு லக்னம் மற்றும் தசா புத்திகள் அதிகம் ஒத்துழைத்தல் இந்த துறையில் முழு நேரமாக
ஈடுபட வாய்ப்புகள் அதிகம் உண்டு என்று பார்த்தோம்
சார ஜோதிட முறையில் ஷேர்மார்க்கெட்டில் ஈடுபட்டு
வருபவர்களின் ஜாதகத்தில் 5ம் பாவம் 11ம் பாவத்தினை தொடர்பு கொண்டு இருந்தால் அதனால் ஏற்படும்
விளைவுகள் பொருளாதார ரீதியாக சாதகமா? பாதகமா? அல்லது ஷேர்மார்க்கெட்டில் எப்படி ஈடுபடவேண்டும் என்று இந்த
பதிவில் பார்ப்போம்.
5ம் பாவம் தன்னுடைய நட்சத்திர உப நட்சத்திர
தொடர்பின் மூலம் 11ம் பாவத்தினை தொடர்பு கொள்வது ஷேர்மார்க்கெட் தொழில்
செய்பவர்களுக்கு ஒரு மத்திமமான அமைப்மை தரும். இந்த தொடர்பானது 5ம் பாவத்திற்கு
புறம் சார்ந்த விசயங்களுக்கு ஒரு நடுநிலையான அமைப்பை கொடுக்கும். அதாவது பெரிய
அளவிற்கு வருமானத்தை தராது.
ஆனால் அகம் சார்ந்த விசயங்களுக்கு பெரிய
வெற்றியை தரும். அதாவது 5ம் பாவத்தில் உள்ள ஆலோசனை கூறுதல் என்ற காரகம் சிறப்பை
தரும் ஜாதகருக்கு. மேலும் இந்த 11ம் பாவத் தொடர்பு 7ம் பாவத்திற்கு (வாடிக்கையாளர்களுக்கு)
5ம் பாவமாக வரும். எனவே ஜாதகர் இந்த தொழிலில் பங்கு சந்தை ஆலோசகராக செயல் பட்டால் வாடிக்கையாளர்களுக்கு
வெற்றி மற்றும் ஜாதகருக்கு திருப்தி கிடைக்கும்.
மேலும் 11ம் பாவம் லக்னம், 5ம் பாவம் மற்றும்
9ம் பாவத்திற்கு(வாக்கு பலிதம்) போன்றவற்றிக்கு சாதகமாகவும் 2ம் பாவம்,11ம் பாவம்
ஆகியவற்றிக்கு மத்திமமாகவும் உள்ளது. எனவே 5ம் பாவம் 11ம் பாவத்தை தொடர்புகொண்டு இருக்கும்
ஜாதகர் தொழில் முறையாக செய்யாமல் ஆலோசகராக செயல்பட்டால் வெற்றி மற்றும் பொருளாதார
உயர்வு கிடைக்கும்.
நன்றி நண்பர்களே!
Su. Sureshastrovaasan@gmail.com
No comments:
Post a Comment