Tuesday, 14 October 2014

பங்குச்சந்தையும் ஜாதக அமைப்பும் – பாகம் 7


வணக்கம் நண்பர்களே!

முந்தய பதிவில் 5ம் பாவம் தான் நின்ற நட்சத்திர உப நட்சத்திரம் மூலம் 5ம் பாவத்தை தொடர்பு கொள்ளும்பொழுது வர்த்தகத்தில் ஈடுபடுவது சிறப்பு கிடையாது என்றம் இவர்களால் ஷேர்மார்க்கெட் தொழிலை தொழிலாக செய்யமுடியாது என்றும் பார்த்தோம்.

ஷேர்மார்க்கெட்டில் ஈடுபட்டு வருபவர்களின் ஜாதகத்தில் 5ம் பாவம் 6ம் பாவத்தினை தொடர்பு கொண்டு இருந்தால் அதனால் ஏற்ப்படும் விளைவுகள் பொருளாதார ரீதியாக சாதகமா? பாதகமா? அல்லது ஷேர்மார்க்கெட்டில் எப்படி ஈடுபடவேண்டும் என்று இந்த பதிவில் பார்ப்போம்.

பொதுவாகவே 5ம் பாவத்தின் 6ம் பாவத்தொடர்பு என்பது சிறப்பான தொடர்பு ஆகும். மேலும் 6ம் பாவமானது 2 மற்றும் 10 பாவங்களுக்கு சாதகமான பாவமாதலால் இந்த ஷேர்மார்க்கெட் தொழிலை தொழிலாகவே நீடித்து செய்ய இயலும். நல்ல வருமானமும் உண்டு.

மேலும் 6ம் பாவம் லக்ன பாவத்திற்கு வெற்றியை தரக்கூடியதாதலால் இந்த தொழிலில் வெற்றி மற்றும் வருமானமும் உண்டு. மேலும் ஜாதகருக்கு இந்த பாவ தொடர்பினால் அசிங்க அவமானங்கள் வராது.

இந்த தொழிலில் இவரை தொடர்பு கொள்ளும் அனைவரையும் ஆளுமை செய்வார். தானுடைய ஆதிக்கத்தை செலுத்துவார். இவரை தொடர்பு கொள்ளும் நபர்கள்(7ம் பாவம்) இந்த 6ம் பாவ தொடர்பினால் அவர்களுக்கு தோல்வியே கிடைக்கும்.

இவருக்கு புரோக்கரேஜ் ஆபீஸ் வைத்து தொழில் செய்யும் வாய்ப்பு உண்டு. இவரிடம் குறைவான மற்றும் வசதியுள்ள நபர்கள் அதாவது அதிக பணத்தை கையாளக்கூடிய நபர்களே இவரிடம் வாடிக்கையாளராக இருப்பார்கள்.     

நன்றி நண்பர்களே!

Su. Suresh   
astrovaasan@gmail.com

No comments:

Post a Comment