வணக்கம் நண்பர்களே!
முந்தய பதிவில் 5ம் பாவம் தான் நின்ற நட்சத்திர உப நட்சத்திரம் மூலம் 4ம்
பாவத்தை தொடர்பு கொள்ளும்பொழுது வர்த்தகத்தில்
ஈடுபடுவது பிரச்சினையை கொடுக்கும் என்றும் அவர்கள் அடுத்தவர்களுக்கு பயிற்சி கொடுக்கும் திறமையினை
பெற்றவர்களாக இருப்பார்கள் என்றும் பார்த்தோம்.
ஷேர்மார்க்கெட்டில் ஈடுபட்டு வருபவர்களின் ஜாதகத்தில் 5ம் பாவம் 5ம்
பாவத்தினை தொடர்பு கொண்டு இருந்தால் அதனால் ஏற்ப்படும் விளைவுகள் பொருளாதார
ரீதியாக சாதகமா? பாதகமா? அல்லது ஷேர்மார்க்கெட்டில் எப்படி ஈடுபடவேண்டும் என்று இந்த பதிவில்
பார்ப்போம்.
பொதுவாகவே 5ம் பாவத்தின் 5ம் பாவத்தொடர்பு என்பது சிறப்பான அமைப்பு கிடையாது. இந்த அமைப்பை
கொண்டவர்கள் ஷேர்மார்க்கெட் தொழிலை தொழிலாக செய்யமுடியாது. ஏனென்றால் 5ம் பாவம்
10 பாவத்திற்கு 8 ஆக வரும்.
மேலும் 2,6,10 பாவங்களுக்கு இந்த 5ம் பாவம் 4,8,12 பாவங்களாக
அமைவதால் பொறுப்புடன் இந்த தொழிலை அவர்களால் செய்ய இயலாது. சரியான நேரத்தில் சரியான பாதையில் இவர்களால் வர்த்தகத்தில்
ஈடுபடமுடியாது.
தனக்கென்று எந்த ஒரு வழிமுறையும் வைத்துக்கொண்டு செயல்பட மாட்டார்கள்.
மார்க்கெட்டின் வழியில் செல்ல மாட்டார்கள். தன்னுடைய உள்ளுனர்விக்கே அதிக முக்கியத்துவம்
கொடுத்து செயல்படுவார்கள். 5ம் பாவத்தின் 5ம் பாவத்தொடர்பு என்பது லக்னத்திற்கு
சாதகமாக இருப்பதால் இவர்களுக்கு பெரிய பிரச்சினைகள் இந்த தொழில் மூலம் வராது.
இவர்கள் தன்னைச் சார்ந்து இருப்பவர்களுக்கு வழங்கும் பரிந்துரைகள்
வெற்றி பெரும். பொதுவாக 5ம் பாவத்தொடர்பு கொண்டவர்களுக்கு இறையருள் மூலம் வாக்கு
பலிதம் அதிகம் இருக்கும். இவர் இந்த தொழில் மூலம் யாரையும் ஏமாற்ற மாட்டார்.
மேலும் இந்த அமைப்பு கொண்டவர்கள் ஜோதிட ஆர்வம் மிக்கவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் தன்னால் இந்த துறையில் சம்பாதிக்க முடியாவிட்டாலும்
அடுத்தவர்களுக்கு வழிகாட்டியாக விளங்குவார்கள்.
நன்றி நண்பர்களே!
Su. Suresh astrovaasan@gmail.com
No comments:
Post a Comment