Friday, 3 October 2014

பங்குச்சந்தையும் ஜாதக அமைப்பும் – பாகம் 5


ஜாதகர் ஷேர் மார்க்கெட்டின் மூலம் சம்பாதிக்க முடியுமா? – பாகம் 5

வணக்கம் நண்பர்களே!

முந்தய பதிவில் 5ம் பாவம் தான் நின்ற நட்சத்திர உப நட்சத்திரம் மூலம் 3ம் பாவத்தை தொடர்பு கொள்ளும்பொழுது ஒரு அளவிற்கு வருமானத்தையும் திருப்தியையும் தரக்கூடிய ஒரு அமைப்பை தரும் என்று பார்த்தோம்.

ஷேர்மார்க்கெட்டில் ஈடுபட்டு வருபவர்களின் ஜாதகத்தில் 5ம் பாவம் 4ம் பாவத்தினை தொடர்பு கொண்டு இருந்தால் அதனால் ஏற்ப்படும் விளைவுகள் பொருளாதார ரீதியாக சாதகமா? பாதகமா? அல்லது ஷேர்மார்க்கெட்டில் எப்படி ஈடுபடவேண்டும் என்று இந்த பதிவில் பார்ப்போம்.

பொதுவாகவே 5ம் பாவத்தின் 4ம் பாவத்தொடர்பு என்பது ஒரு பாதகமான அமைப்பு ஆகும். 5ம் பாவத்திற்கு இந்த தொடர்பு 12ஆக வரும். இந்த தொடர்பு கொண்ட ஜாதகர் வர்த்தகத்தில் ஈடுபடுவததை விட தான் கற்றவற்றை மற்றவருக்கு கற்ப்பிக்கும் ஆசிரியராக செயல்படுவது சிறப்பு.

இவர்கள் தனக்கென்று ஒரு வழிமுறையை உருவாக்கி வைத்துக்கொண்டு யூகங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் செயல் படுவார்கள். இவர்கள் ஒரே இடத்திலேயே அல்லது வீட்டிலேயே தங்களது தொழிலை செய்வார்கள்.

4ம் பாவம் என்பது 10ம் பாவத்திற்கு 7ம் பாவமாக வருவதால் இவருக்கு தொழில் போட்டிகள் அதிகமாக இருக்கும். பொதுவாக ஜாதகர் எந்த பாவக ரீதியாக தொழில் செய்தாலும் அந்த பாவம் 4ம் பாவ தொடர்பு கொண்டு இருந்தால் கண்டிப்பாக அவர்களுடைய தொழிலை போட்டியுடனேயே செய்ய வேண்டி வரும்.

5ம் பாவம் 4ம் பாவ தொடர்புடைய நபர்கள் ஷேர் மார்க்கெட் சம்மந்தமான நூல்களையும், அதற்க்கு உண்டான மென்பொருட்களை(Software) விற்கும் வாய்ப்புகள் அமையும்.

ஷேர் மார்க்கெட்டில் ஈடுபடும் ஜாதகருக்கு லக்ன பாவம் 3,7,11 பாவ தொடர்பு கொண்டு இருந்து 5ம் பாவம் 4ம் பாவ தொடர்புகொண்டு இருந்தால் 4ம் பாவ செயல்பாடுகள் ஒரு அளவிற்கு கட்டுப்படுத்தப்படும். மேலும் தற்போதைய தசா புத்தியும் 5ம் பாவத்திற்கு சாதகமாக இருக்க வேண்டும்.

நன்றி நண்பர்களே!
Su.Suresh

No comments:

Post a Comment