வணக்கம் நண்பர்களே!
10ம் பாவம் தான் நின்ற நட்சத்திர உப நட்சத்திரத்தின் மூலம் 2ம்
பாவத்தினை தொடர்பு கொள்வது ஜாதகருக்கு சிறப்பான அமைப்பினை தரும். ஏனென்றால் இந்த
2ம் பாவம் 10ம் பாவத்தின் திரிகோண பாவமாகும்.
10ம் பாவம் 2ம் பாவத்தினை தொடர்பு கொள்வதனால் தொழில் மூலம் நல்ல
வருமானம் வரும். எனவே ஜாதகர் செய்யும் தொழிலை நீடித்து செய்ய முடியும்.
2ம் பாவம் 1ம் பாவத்திற்கு சாதகமாக உள்ளபடியால் ஜாதகர் தொழில் மூலம்
தன்னை பெரிதும் வருத்திக்கொள்ள மாட்டார். மேலும் ஜாதகர் தான் பார்க்கும் தொழிலை
அடிக்கடி மாற்றவும் மாட்டார். மேலும் தொழிலுக்காக அதிகம் போராட மாட்டார்.
மேலும் இந்த தொடர்பானது சிறப்படைய சார ஜோதிட முறையில் சில விதிகள்
உள்ளன. அவை.
10ம் பாவ உப நட்சத்திரம் 5 மற்றும் 9ம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாக
இருக்க கூடாது.
லக்ன பாவம் 5,9ம் பாவங்களுடன் தொடர்பு இருக்க கூடாது.
நன்றி நண்பர்களே!
Su.Suresh
.png)
laknathil irynthu 10il sevvai kiragam irunthal thozhil nandra gha irukkuma and palangal sir
ReplyDelete