வணக்கம் நண்பர்களே!
10ம் பாவம் தான் நின்ற நட்சத்திர உப நட்சத்திரத்தின் மூலம் 4ம்
பாவத்தினை தொடர்பு கொள்வது ஜாதகருக்கு சாதகமான அமைப்பினை தரும். இந்த 4ம் பாவ
தொடர்பு 2ம் பாவத்திற்கு 3ம் பாவமாக வரும். இதனால் ஜாதகர் செய்கின்ற தொழில் மூலம்
அதிக வருமானம் வருவதைக் காட்டுகிறது.
4ம் பாவமானது லக்ன பாவத்திற்கு 4ம்
பாவமாகவே வருவதால் ஜாதகரின் தனித் தன்மை என்பது 70% வரை இல்லாமல் போய் விடுகிறது.
எனவே ஜாதகர் பணம் ஒன்றே குறிகோளாக தன்னுடைய தனித்திறமையை வெளிப்படுத்தாமல்
தொழிலில் ஈடுபடுவார்.
4ம் பாவம் என்பது நிலையாக இருத்தலை குறிக்கும். எனவே ஜாதகரும் தான்
செய்கின்ற தொழிலில் நிலையாக மாற்றங்கள் இல்லாமல் ஒரே மாதிரியான தொழிலை செய்வததை குறிக்கும்.
தொழில் ஸ்தானத்தை கெடுக்கக் கூடியது 5 மற்றும் 9 ம் பாவங்கள் ஆகும்.
அந்த பாவங்களையே கெடுக்கக் கூடியது இந்த 4ம் பாவம். எனவே தொழிலுக்கு இந்த 4ம் பாவத்
தொடர்பு ஒரு சிறந்த அமைப்பாகவே கருதலாம்.
நன்றி நண்பர்களே!
Su.Suresh
No comments:
Post a Comment