காதல் – பாகம் 2
வணக்கம் நண்பர்களே!
முந்தய பதிவில் 1 முதல் 3 பாவங்களும் 5ம்
பாவத்தினை தொடர்பு கொள்ளும் பொழுது ஜாதகர் யாரை காதலிப்பார் என்று பார்த்தோம்.
இப்பொழுது 4 முதல் 12 பாவங்களும் தான் நின்ற நட்சத்திர உப
நட்சத்திரத்தின் மூலம் 5ம் பாவத்தினை தொடர்பு கொள்ளும் பொழுது ஜாதகருக்கு காதல் யார்
மேல் வரும் என்பதை பார்ப்போம்.
4ம் பாவம் 5ம் பாவத்துடன் தொடர்பு கொள்ளும் பொழுது ஜாதகர் ஒரே
காம்பவுண்டில் வசிப்பரை அல்லது உறவினரை சிறு வயது முதல் காதலிப்பார்.
5ம் பாவம் 5ம் பாவத்துடன் தொடர்பு கொள்ளும்
பொழுது ஜாதகர் கலைஞர்களை காதலிப்பார்.
6ம் பாவம் 5ம் பாவத்தினை தொடர்பு கொள்ளும்
பொழுது ஜாதகர் அடுத்த தெருவில் உள்ள நபர்களை அல்லது தனது பணியாளர்களை காதலிப்பார்.
7ம் பாவம் 5ம் பாவத்தினை தொடர்பு கொள்ளும்
பொழுது ஜாதகர் எதிர் வீடு அல்லது பக்கத்து ஊரில் உள்ளவரை ஜாதகர் காதலிப்பார்.
8ம் பாவம் 5ம் பாவத்தினை தொடர்பு கொள்ளும் பொழுது ஜாதகர் சண்டை
சச்சரவுகள் மூலம் தீடீர் என்று காதல் வசப்படுவார்.
9ம் பாவம் 5ம் பாவத்தினை தொடர்பு கொள்ளும்
பொழுது ஜாதகர் வெளி மாநிலம் அல்லது அந்நிய மதத்தினரை காதலிப்பார்.
10ம் பாவம் 5ம் பாவத்தினை தொடர்பு கொள்ளும்
பொழுது ஜாதகர் தன்னுடன் பணிபுரிவோரை காதலிப்பார்.
11 ம் பாவம் 5ம் பாவத்தினை தொடர்பு கொள்ளும்
பொழுது ஜாதகர் நண்பர்களின் சகோதர சகோதிரிகளை காதலிப்பார்.
12 ம் பாவம் 5ம் பாவத்தினை தொடர்பு கொள்ளும் பொழுது ஜாதகரின்
காதல் ஒருதலைக் காதலாக இருக்கும் அல்லது வெளிநாட்டவரை காதலிப்பார்.
நன்றி நண்பர்களே!
SURESH
No comments:
Post a Comment