வணக்கம் நண்பர்களே!
10ம் பாவம் தான் நின்ற நட்சத்திர உப நட்சத்திரத்தின் மூலம் 5ம்
பாவத்தினை தொடர்பு கொள்வது ஜாதகருக்கு சாதகமான அமைப்பினை தராது. எந்த ஒரு பாவமும் தன்னுடைய
பாவத்திற்கு 8ம் பாவத்தினை தொடர்பு கொண்டால் தன்னுடைய பாவத்தின் செயல்பாடுகளை (8ம் பாவ
தொடர்பின் மூலம்) எதிர் மறையாக மாற்றிவிடும்.
10ம் பாவம் 5ம் பாவ தொடர்பு கொண்ட ஜாதகர் கண்டிப்பாக ஒரு வேளை
செய்வார். ஆனால் அந்த தொழில் மூலம் சரியாக வருமானம் வராது. மேலும் தொழிலில்
உயர்ந்த நிலைக்கு வரமுடியாது. மோலும் பொறுப்பான பதவியில் நீடித்து இருக்க
முடியாது. ஜாதகரின் கவனம் தான் செய்யும் தொழிலில் இருக்காது.
6ம் பாவம் ஒருவருடைய உடல் உழைப்பினை குறிப்பது ஆகும். அதற்க்கு 12ம்
பாவமான 5ம் பாவம் உடல் உழைப்பினை கொடுக்காமல் இருப்பதை குறிக்கும். எனவே 10ம்
பாவத்தின் 5ம் பாவ தொடர்பின் மூலம் ஜாதகர் தன்னுடைய தொழிலுக்கு அதிகப்படியான உடல்
உழைப்பினை கொடுக்கமாட்டார்.
மேலும் 6ம் பாவம் அடுத்தவரை வெற்றி கொள்வதை குறிப்பது ஆகும். ஆனால்
அதன் 12ம் பாவமான 5ம் பாவம் அடுத்தவருக்கு விட்டுக் கொடுத்தலைக் குறிக்கும். எனவே
இந்த 5ம் பாவ தொடர்பு அடுத்தவருக்கு விட்டுக் கொடுத்தலையும், பரிதாபப் படுவதையும்
குறிக்கும்.
ஜாதகர் தன்னுடைய கடமையை, பொறுப்பினை தன்னுடைய தொழிலில் நிறைவேற்ற
உணர்வுப் பூர்வமாக சிந்திப்பார். தொழிலில் உணர்வுப் பூர்வமாக சிந்திப்பது பெரிய
வெற்றியை கொடுக்காது.
ஜாதகர் கலை,கமிசன் மற்றும் அடுத்தவருக்கு ஆலோசனை கூறுதல் போன்ற அதிக
உடல் உழைப்பில்லாத தொழில்களை செய்யும் பொழுது அதிக வெற்றியினை பெறுவார். பெரிய
வீழ்ச்சிகளை பெற மாட்டார்.
நன்றி நண்பர்களே!
Su.Suresh
No comments:
Post a Comment