Tuesday, 2 December 2014

ஜாதகமும் தொழில் அமைப்பும் – பாகம் 8


வணக்கம் நண்பர்களே!

10ம் பாவம் தான் நின்ற நட்சத்திர உப நட்சத்திரத்தின் மூலம் 6ம் பாவத்தினை தொடர்பு கொள்வது ஜாதகருக்கு சாதகமான அமைப்பினை தந்து தன்னுடைய தொழிலை மிகச் சிறப்பான முறையில் நடத்தும் அமைப்பினை தரும். 6ம் பாவத்தின் காரகங்கலான வெற்றி பெறுதல், தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுத்தல், பொறுப்பு மற்றும் கடமை போன்றவற்றை நன்றாக செயல்படுத்த இந்த தொடர்பு வழிவகுக்கும்.

10ம் பாவம் 6ம் பாவத்தினை தொடர்பு கொள்ளும் பொழுது ஜாதகருக்கு அவருடைய தொழிலினை விரிவாக்கம் செய்ய எளிதாக கடன் கிடைக்க வழிவகுக்கும்.

7ம் பாவம் என்பது வாடிக்கையாளரை குறிக்கும். அதன் 12ம் பாவமாகிய 6ம் பாவம் தொழிலில் வாடிக்கையாளர் வீழ்ச்சி அடைவதைக் குறிக்கும்.
அதாவது ஜாதகருக்கு வெற்றியையும் ஜாதகரின் வாடிக்கையாளருக்கு நஷ்டத்தையும் கொடுக்கும். மேலும் ஜாதகர் மற்றவர்கள் விற்கும் விலையை விட அதிக விலைக்கு விற்பதனால் இவரிடம் வாங்குபவர்களுக்கு நஷ்டம் உண்டாகும்.

எனவே இவரிடம் ஒருமுறை வியாபாரத்தில் ஈடுபட்டவர் அடுத்த முறை வரமாட்டார். இவருடன் தொழிலில் போட்டி இடுவது என்பதும் கடினம்.

மேலும் மற்றவர்களால் தரமுடியாத மற்றும் செய்ய முடியாத வணிகத்தை செய்வார். அவற்றை வித்தியாசமான முறையில் செய்து வெற்றி பெறுவார்.

6ம் பாவம் 1ம் பாவம் மற்றும் 2ம் பாவங்களுக்கு சாதகமாக உள்ளதால் 6ம் பாவத்தின் மூலம் அகம் மற்றும் புறம் சார்ந்த காரகங்களை பிரச்சினை இல்லாமல் அனுபவிப்பர். அதாவது வலி, வேதனை, அவமானம் இல்லாமல்  ஜாதகர் தொழில் செய்யும் வாய்ப்புகளை இந்த 6ம் பாவதொடர்பு கொடுக்கும்.

நன்றி நண்பர்களே!

Su.Suresh

No comments:

Post a Comment