வணக்கம் நண்பர்களே!
10ம் பாவம் தான் நின்ற நட்சத்திர உப நட்சத்திரத்தின் மூலம் 7ம்
பாவத்தினை தொடர்பு கொள்வது ஜாதகருக்கு 70% அளவிற்கு சாதகமான அமைப்பினை தந்து அவருடைய தொழிலை நடத்த ஒரு நடுநிலையான அமைப்பினை தரும்.
8ம் பாவத்தின் காரகங்கலான தீடீர் வீழ்ச்சி, வலி, வேதனை, எதிர் பாராத
பிரச்சினைகள் போன்றவற்றை ஜாதகர் அனுபவிக்க மாட்டார். ஏனென்றால் 8ம் பாவத்திற்கு
7ம் பாவம் 12ம் பாவமாக வருவதால் 8ம் பாவ காரகங்கள் செயல் படாது.
ஜாதகர் இந்த 7ம் பாவத்தொடர்பினால் தொழில் ரீதியாக எந்த ஒரு விசயத்தையும்
தனக்கு சமமானவர்களோடு பகிர்ந்து கொள்ளுவார். மேலும் வெளிப்படையாகவும்,
மற்றவர்களின் ஆலோசனைகளை கேட்பவராகவும், மற்றவர்களோடு இணைந்து ஜாதகர் செயல்
படுவார். இதன் மூலம் தொழிலில் தவறான முடிவுகள் எடுப்பது தவிர்க்கப்படுகிறது.
மேலும் இந்த தொடர்பு 2,6,10ம் பாவங்களுக்கு 4,8,12ம்
பாவங்களாக வரவில்லை. எனவே ஒரு அளவிற்கு நல்ல பொருளாதார முன்னேற்றம் இந்த
தொடர்பினால் உண்டு.
இந்த 10ம் பாவத்தின் 7ம் பாவ தொடர்பு மூலம் ஜாதகர் தொழில் மூலம் அதிக நபர்களை சந்திப்பார்.
நன்றி நண்பர்களே!
Su.Suresh
No comments:
Post a Comment