Sunday, 29 June 2014

ஜோதிடம் பார்க்க விருப்பமா?





பிறந்த தேதி, பிறந்த நேரம், பிறந்த ஊர் மற்றும் உங்கள் கேள்விகளையும் எழுதி அனுப்பவும்.

நான் உயர் கணித சார ஜோதிட முறையில் ஜாதகம் கணித்து பலன்கள் கூறி வருகிறேன். உங்களுடைய ஜாதகத்தை ஆராய்ந்து கீழ்க்கண்ட பலன்களை உங்களுக்கு தருகிறேன்.

1. 12 பாவங்களை பற்றிய முழு ஆய்வு
2. இனி வரும் காலத்தில் மகிழ்ச்சியான காலகட்டம் எது?
3. பொருளாதரத்தில் உயர போகும் காலம் எது?
4. பிரச்சினையான காலத்தை கண்டு பிடித்து அதற்கு ஏற்ற முறையில் உங்களை தயார் படுத்தி கொள்ளலாம்.
5. திருமணம் மற்றும் குழந்தை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
6. வீடு யோகம் உண்ட இல்லையா?
7. வேலையில் உயர்வு எப்போது?
8. இட மற்றம் எப்போது?
9. நீங்கள் தொழில் செய்பவராக இருந்தால் உங்களுக்கு ஒவ்வொரு நாளிலும் வரும் வெற்றியை மட்டும் தேடி தரும் நேரத்தை குறித்து தருகிறேன்.
10. கடன்கள் அடைக்க ஒவ்வொரு மதத்திலும் சிறந்த நாள் மற்றும் நேரத்தை குறித்து தருகிறேன்.

கட்டணம் ஒரு ஜாதகத்திற்கு ரூ 250 மட்டும். ஒருமுறை கட்டிவிட்டால் போதும்.  நீண்டால் எப்பொழுது வேண்டுமானாலும் என்னை தொடர்பு கொண்டு உங்களுடைய சந்தேகங்களை கேட்கலாம்.

தொடர்புக்கு: astrovaasan@gmail.com

நன்றி
SU.Suresh
9952127002

அரசியல் யோகம் எப்படி அமையும்? - பாகம் 6





வணக்கம் நண்பர்களே!

5ம் பாவம் 3ம் பாவத்துடன் தொடர்பு கொண்டு இருந்தால் அந்த ஜாதகருக்கு அரசியல் பிரயாணங்கள், விளம்பரங்கள்,நூல்கள் வெளியிடுதல் மூலமாக  புகழ் பெறுவார் என்று பார்த்தோம்.

இங்கு 5ம் பாவம் தான் நின்ற நட்சத்திர உபநட்சத்திரம் மூலம் 4ம் பாவத்தினை தொடர்பு கொள்ளும் போது உண்டாகும் பலன்களை பார்ப்போம்.

5ம் பாவம் 4ம் பாவ தொடர்பினை பெரும் பொழுது ஜாதகர் எப்பொழுதும் அறிவுக்கு மதிப்பு கொடுப்பவராக இருப்பார். மேலும் ஜாதகருக்கு கற்பனைவளம் குறைவாகத்தான் இருக்கும். உள்ளதை உள்ளபடி மக்களிடம் பேசிவிடுவார். அரசியலுக்கு உரிய நெளிவு சுளிவு பேச்சில் இருக்காது. மக்களுக்கு புரியும்படியாகவும் சரியாக பேச தெரியாது.

4ம் பாவம் என்பது 5ம் பாவத்திற்கு 12ம் பாவமாக வருவதால் அவருடைய பேச்சில் கற்பனை மற்றும் கவர்ச்சி என்பது இருக்காது. சில நேரங்களில் அவருடைய பேச்சின் மூலமாக பிரச்சினைகளை அனுபவிப்பார். இவர் தனது சொந்த ஊரிலேயே அரசியல் பதவி வகிப்பார். அதன் மூலம் சொத்துக்கள் அதிகம் சேர்த்துவிடுவார்.

இவருக்கு அதிகமான போட்டிகள் இருக்கும். ஏனென்றால் 4ம் பாவமானது 10ம் பாவத்திற்கு 7ம் பாவமாக வருவதால் கடேசி வரை ஜாதகர் போட்டிகளுடனேயே அரசியல் வாழ்க்கையில் ஈடுபடுவார். 


நன்றி நண்பர்களே!
Su.Suresh
astrovaasan@gmail.com

அரசியல் யோகம் எப்படி அமையும்? - பாகம் 5

வணக்கம் நண்பர்களே!
5ம் பாவம் 2ம் பாவத்துடன் தொடர்பு கொண்டு இருந்தால் அந்த ஜாதகருக்கு மேடை பேச்சு மற்றும் நியாபக சக்தி நன்றாக இருக்கும் என்று பார்த்தோம்.
இங்கு 5ம் பாவம் தான் நின்ற நட்சத்திர உபநட்சத்திரம் மூலம் 3ம் பாவத்தினை தொடர்பு கொள்ளும் போது உண்டாகும் பலன்களை பார்ப்போம்.
5ம் பாவம் 3ம் பாவ தொடர்பினை பெரும் பொழுது ஜாதகர் சிறு பிரயானங்களை அரசியல் காரணங்களுக்காக செய்து கொண்டே இருப்பார். மேலும் இவர் மக்களுக்கு எதை மட்டும் கூற வேண்டுமோ அதைமட்டும் தெளிவாக புரியும்படியாக பேசுவார்.
இவரைப்பற்றி அடிக்கடி பதிரிக்கையில் செய்தி வந்துகொண்டே இருக்கும். அதன் மூலமாக இவருக்கு செல்வாக்கும் மற்றும் புகழ் அதிகரிக்கும். மேலும் ஜாதகர் அரசியல் சார்ந்த நூல்களை வெளியிடுவார். விளம்பரங்களில் அதிக ஆர்வம் கொண்டவராக இருப்பார்.
சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை எளிதாக மற்றிகொள்ளும் திறமை வாய்ந்தவராக திகழ்வார். மக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டு புகழ் பெறுவார்.

நன்றி நண்பர்களே!
Su.Suresh


astrovaasan@gmail.com

Saturday, 28 June 2014

அரசியல் யோகம் எப்படி அமையும்? - பாகம் 4


வணக்கம் நண்பர்களே!

5ம் பாவம் 1ம் பாவத்துடன் தொடர்பு கொண்டு இருந்தால் அந்த ஜாதகருக்கு  சிந்தனை,சுயமுயற்சி, கற்பனைதிறன் போன்றவைகள் ஜாதகருக்கு நன்றாக இருக்கும் என்று பார்த்தோம்.

இங்கு 5ம் பாவம் தான் நின்ற நட்சத்திர உபநட்சத்திரம் மூலம் 2ம் பாவத்தினை தொடர்பு கொள்ளும் போது உண்டாகும் பலன்களை பார்ப்போம்.

அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு முக்கியமாக இருக்க வேண்டியது பேசும் திறன், அதாவது மேடை பேச்சு. மேடையில் பேசத்தெரியதவர்கள் அரசியலில் சிறப்பானதொரரு இடதிற்க்கு வர முடியாது.

சில காட்சிகளில் சிலரை மேடை பேச்சுக்காகவே பயன் படுத்தி கொள்ளுவார்கள். அதன் மூலம் அவருக்கு வருமானம் கிடைக்கும். இதற்கு காரணம் 5ம் பாவமானது தான் நின்ற நட்சத்திர உப நட்சத்திரத்தின் மூலமாக 2ம் பாவத்தை தொடர்பு கொண்டு இருப்பதால் உடல் உழைப்பு இல்லாத வகையில் பேச்சின் மூலமாக அவர்களுக்கு வருமானம் வரும்

இந்த அமைப்பு உள்ளவர்கள் நிகழ்வுகளை எளிமையான முறையில் சொந்த கருத்துகள் மூலமாக அடிதட்டு தொண்டனுக்கு கூட புரிகின்ற வகையில் நன்றாக பேசுபவராக இருப்பார். இந்த அமைப்பு உள்ள ஜாதகருக்கு நியாபக சக்தி அதிகமாக இருக்கும்.

நன்றி நண்பர்களே!

Su.Suresh
astrovaasan@gmail.com

அரசியல் யோகம் எப்படி அமையும்? - பாகம் 3



வணக்கம் நண்பர்களே!

அரசியலில் நல்லதொரு இடத்திற்கு வர 5ம் பாவம் மற்றும் லக்னபாவமும் சாதகமான முறையில் இருக்க வேண்டும் என்று பார்த்தோம்.  இனி வரும் பதிவுகளில் 5ம் பாவம் 1 முதல் 12 பாவங்களை தான் நின்ற நட்சத்திர உபநட்சத்திரத்தின் மூலமாக தொடர்பு கொள்ளும்பொழுது ஜாதகரின் அரசியல் வாழ்க்கை எப்படி அமையும் என்பதனை சார ஜோதிட முறையில் பார்ப்போம்.

5ம் பாவம் தான் நின்ற நட்சத்திர உபநட்சத்திரத்தின் மூலமாக 1ம் பாவத்தை தொடர்புகொள்ளும் பொழுது ஜாதகர் தேர்தலில் எளிதாக வெற்றி பெற வாய்ப்புகள் அதிகமா இருக்கும். 5ம் பாவமும் 1ம் பாவமும் ஜாதகருக்கு சாதகமாக இருந்து  5ம் பாவம் 1ம் பாவத்தை தொடர்பு கொண்டு தசா புத்தியும் ஒத்துழைக்கும் பட்சத்தில் தேர்தலில் பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.

மேலும் 5ம் பாவத்தின் 1ம் பாவ தொடர்பு மூலமாக ஜாதகர் சுயமாக சிந்திக்கும் ஆற்றலை அதிகமாக பெற்று இருப்பார். இதனால் சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் தன்னை எளிதாக மாற்றி கொள்ளுவார். கற்பனைத்திறன் நன்றாக  அமைந்து இருக்கும். எந்த ஒரு முடிவுகளையும் சுயேட்சையாக எடுத்து, எல்லாவிதமான குறுக்கீடுகளையும் எளிதாக சமாளித்து மக்கள் தொண்டு செய்பவராக இருப்பார்.

அத்துடன் எந்த ஒரு சூழ்நிலையிலும் தன்னுடைய சுய கவுரவத்தை  இழக்காமல் மக்களுக்காக நல்ல முடிவுகளை எடுத்து அதன் மூலம் நல்ல செயல்களை செய்து தன்னுடைய அரசியல் வாழ்க்கையில் சிறந்த தலைவராக விளங்குவார்.

நன்றி நண்பர்களே!

Su.Suresh

அரசியல் யோகம் எப்படி அமையும்? - பாகம் 2



வணக்கம் நண்பர்களே!

ஜாதகர் அரசியலில் ஈடுபட லக்ன பாவமும், 5 ம் பாவம் சாதகமான முறையில் இருக்க வேண்டும் என்று பார்த்தோம். அரசியலில் பெரிய தலைவர்களாக வருவதற்கு லக்ன பாவமும் 5ம் பாவமும் 1,6,11 பாவங்களை தொடர்பு கொண்டு இருந்தால் மிகவும் சிறப்பு.

ஏனென்றால் 1ம் பாவ தொடர்பின் மூலமாக ஜாதகருக்கு சுய முயற்சி, சொந்த கருத்தினை வெளிப்படுத்தும் திறன் என்பது நன்றாக இருக்கும். 6ம் பாவ தொடர்பின் மூலம் வெற்றி என்பது எளிதாக கிட்டும். 11ம் பவ தொடர்பின் மூலம் சுய முயற்சிகள் வெற்றி பெறுபவராக இருப்பார்.

மேலும் அரசியலில் ஈடுபட சூரியன்,புதன் மற்றும் குரு ஆகிய கிரகங்கள் நன்றாக இருக்க வேண்டும்.

சூரியன் நன்றாக இருந்தால் நிர்வாகம் செய்யும் திறமை,தலைமை தாங்கும் திறன், ஆளுமை போன்றவற்றில் மிகச்சிறந்தவராக இருப்பார்.

அரசியலில் இருப்பவர்களுக்கு நியாபக சத்தி என்பது மிக முக்கியமானது. தெளிவான சிந்தனை வேண்டும். இவற்றிக்கு காரகம் வகிப்பவர் புதன். எனவே புதன் 8 மற்றும் 12ம் பாவங்களுடன் தொடர்பு கொண்டு இருக்க கூடாது.

குரு நன்றாக இருந்தால் தொண்டர்கள் மற்றும் ஜாதகரின் அருகில் இருப்பவர்கள் இவருடைய சொல்படி நடந்து கொள்ளவார்கள்.

எனவே குரு,சூரியன் மற்றும் புதன் ஆகிய கிரகங்கள் 5 மற்றும் 9ம் பாவங்களை தொடர்பு கொண்டு இருக்க கூடாது. அப்படி 5 மற்றும் 9ம் பாவங்களை தொடர்பு கொண்டு இருந்தால் அந்தஸ்து,புகழ் போன்றவற்றை இழந்து விடுவார். நிலையாக அரசியலில் இருக்க முடியாது. அடுத்தவருக்கு பதவியை விட்டு கொடுத்து விடுவார்.

நன்றி நண்பர்களே!

Su.Suresh

astrovaasan@gmail.com

அரசியல் யோகம் எப்படி அமையும்? - பாகம் 1



அரசியல் - பெயர், புகழ்,வசதி மற்றும் பல விசயங்களை ஒட்டு மொத்தமாக கொண்டுள்ள தொழில். அந்த தொழிலில் ஒருவர் ஈடுபட வேண்டும் என்றால் அவருடைய ஜாதக அமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதை சார ஜோதிட முறையில் பார்க்கலாம்.

5ம் பாவம் என்பது அரசியல் மற்றும் கலைத்துறை சார்ந்த துறைகளை கொண்டுள்ளது. 7ம் பாவம் என்பது மக்கள் தொடர்பினை குறிக்கக்கூடியது. அந்த 7ம் பாவத்திற்கு 11ம் பாவமாகிய 5ம் பாவம் 7ம் பாவத்திற்கு திருப்தி மற்றும் மகிழ்ச்சியை கொடுக்க கூடியது. எனவே ஜாதகரின் 5ம் பாவத்தின் உபநட்சதிர அதிபதி   அதற்கு சாதகமான பாவங்களுடன் தொடர்பு கொண்டால் தான் மக்கள் கூட்டத்தை திருப்தியுடன் மகிழ்ச்சியுடன் வைத்து இருக்க முடியும். அவரால் அதிக காலங்கள் அரசியலில் இருக்க முடியும்.

5ம் பாவத்தின் உபநட்சதிர அதிபதி அதற்கு பாதகமான பாவங்களுடன் தொடர்பு கொண்டால் கலை துறையில் நீடித்து இருக்க முடியாது. மேலும் 5ம் பாவம் 10ம் பாவத்திற்கு சாதகமான பாவங்களுடன் தொடர்பு கொண்டும் இருக்க வேண்டும். அவரால் தான் அரசியலை முழு நேர தொழிலாக செய்ய முடியும்.

அதாவது 5ம் பாவத்தின் உப நட்சத்திர அதிபதி தான் நின்ற நட்சத்திர உபநட்சதிரம் மூலம்   5 மற்றும் 10 ம் பாவங்களுக்கு 8 மற்றும் 12 ம் பாவங்களாகிய 4,12 மாற்றும் 5,9 ம்  பாவங்களை தொடர்பு கொள்ள கூடாது.

மேலும் 1ம் பாவமும் 5ம் பாவத்திற்கு சாதகமான பாவங்களுடன் தொடர்பு கொள்ள வேண்டும். ஏனென்றால் லக்னம் தான் கொடுப்பினையை நிர்ணயம் செய்வது. லக்னம் தான் நின்ற நட்சத்திர உப நட்சத்திரத்தின் மூலமாக எந்த எந்த பாவங்களுடன் தொடர்பு கொள்ளுகின்றதோஅந்த பாவங்களின் ரீதியான சிந்தனைகளுடன் ஜாதகர் இருப்பார். எனவே 5ம் பாவத்திற்க்கு  சாதகமற்ற பாவங்களாகிய 4,12ம் பாவங்களை தொடர்பு கொள்ள கூடாது. அப்படி தொடர்பு கொண்டால் அவரால் அரசியலில் ஈடுபட முடியாது.

லக்ன பாவம் 5ம் பாவத்திற்கு சாதகமற்று இருந்து, 5ம் பாவம் அரசியலுக்கு சாதகமாக இருந்தால், தசா புத்திகள் வலிமையான முறையில் 2,3,6,10,11ம் பாவங்களுடன் நன்றாக அமைத்தால் அந்த காலங்களில் மட்டும் அரசியலில் சிறப்பாக செயல்படுவார்.

லக்னம் மற்றும் 5ம் பாவங்கள் அரசியலுக்கு சாதகமாக இல்லாமல் தசா புத்திகள் மற்றும் அரசியலுக்கு வலிமையான முறையில் சாதகமாக இருந்தால், அந்த கால கட்டத்தில் மட்டும் அரசியலில் ஈடுபட முடியும். அவர்களுக்கு M.L.A மற்றும் MP போன்ற பதவிகள் கிடைக்காது.

சார ஜோதிட ஜோதிடம் பார்க்க மற்றும் சார ஜோதிடம் மூலம்   பலன் கூறும் பயிற்சி வகுப்பிற்கு தொடர்பு கொள்ளவும். 

நன்றி நண்பர்களே! 

SU.சுரேஷ் 

9994690117

சார ஜோதிட முறையில் நிலையான பாவங்கள்



வணக்கம் நண்பர்களே!

நிலையான பாவங்கள் என்பது 1,2,6,7,10 ஆகும். இந்த பாவங்கள் தான் ஒவ்வொரு நாளும் பெரும்பான்மையான நேரங்களில் நம்மை வழிநடத்தி செல்பவைகள் ஆகும். இதில் 1 மற்றும் 7 ம் பாவங்கள் உயிர் பற்றான வாழ்கையும் 2,6,10 என்பவைகள் பொருள் பற்றான வாழ்கையையும் தொடர்புடையவைகள் ஆகும். இந்த 5 பாவங்களும் ஒருவருக்கு நல்ல முறையில் அமைந்தால் மிகச்சிறப்பான வாழ்க்கை அமையும். அதாவது நல்ல யோகமுடைய ஜாதகம் என்று சொல்லலாம்.

உதாரணமாக மேற்கூறிய பாவங்களில் 2 அல்லது 3 பாவங்கள் ஒருவருடைய ஜாதகத்தில் கெட்டுவிட்டால் அதனை ஒரு மத்திம யோகமுடைய ஜாதகம் என்று கூறலாம். ஒருவருக்கு நிலையான பாவங்கள் அனைத்தும் கெட்டு இருந்தால் வாழ்க்கை முழுவதும் சிரமங்களை அனுபவிக்க வேண்டியதுதான்.

ஒருவர் எப்படி உயர்ந்த நிலையில் இருந்தலும் 1,2,6,7,10 பாவங்களுக்கு எதிரான தசா,புத்தி,அந்தர,சூட்சம காலங்களில் சிரமங்களை அனுபவிக்க வேண்டி இருக்கும். அதாவது ஜாதகரின் மகிழ்ச்சி மற்றும் பொருளாதார ரீதியில் பிரச்சினையை சந்திக்க வேண்டும்.

நன்றி நண்பர்களே!
SU.Suresh
astrovaasan@gmail.com

லக்னம் சார்ந்த மற்றும் லக்னம் சாரத காரகங்கள் – சுக்கிரன்



வணக்கம் நண்பர்களே!

சுக்கிரனின் அகம் சார்ந்த காரகங்கள் என்பது அழகு,கவர்ச்சி,நளினம்,ஆண் பெண் உறவு,தற்புகழ்ச்சி, போன்றவை ஆகும்.

சுக்கிரனின் புறம் சார்ந்தகாரகங்கள் என்பவை பொன் பொருட்கள்,அழகு பொருட்கள் உற்பத்தி, சினிமா,கதை,கவிதை,வசனம் எழுதுதல்,பிளாஸ்டிக் பொருட்கள்,டைரக்டர்,ஆபாச மையங்கள் போன்றவைகள் ஆகும்.

சுக்கிரனின் ஒற்றைப்படை பாவங்களுடன் தொடர்பு கொண்டால் சுக்கிரனின் காரகங்கள் மூலம் ஜாதகரின் உடல் மற்றும் மனதிற்கு எந்தவிதமான பிரச்சினைகளும் வராது.

சுக்கிரனின் 1,5,9 என்ற பாவங்களை தொடர்பு கொள்ளும் பொழுது சுக்கிரனின் புறசார்புடைய காரகங்கள் மூலம் ஜாதகருக்கு வருமானம் எதுவும் வராது.

ஆனால் சுக்கிரனின் 3,7,11 பாவங்களை தொடர்பு கொள்ளும் பொழுது ஒரு அளவிற்கு ஜாதகருக்கு பொருளாதார முன்னேற்றம் இருக்கும்.

சுக்கிரனின் 2,6,10 என்ற பாவங்களை தொடர்பு கொண்டால் சுக்கிரனினுடைய புறச்சார்பு காரகங்கள் மூலம் சிறப்பான பொருளாதார முன்னேற்றம் இருக்கும். ஆனால் சுக்கிரனின் 2,6,10 தொடர்பு அதனுடைய அகச்சார்புடைய காரகங்களை ஒரு அளவிற்குதான் அனுபவிக்க அனுமதிக்கும். 

சுக்கிரனின் 8,12 பவதொடர்பு பெற்றால் அகம் மற்றும் புறச்சர்புடைய காரகங்கள்  மூலம் ஜாதகருக்கு பிரச்சினைகள் வரும். அதாவது பெண்கள் மூலம் அசிங்க அவமானங்கள்,சினிமா,விபச்சாரம்,ரகசிய திருமணம்,பெண் கடத்தல் மூலம் பாதிப்புகள் ஏற்ப்படும்.


நன்றி நண்பர்களே!
SU.Suresh
astrovaasan@gmail.com