வணக்கம் நண்பர்களே!
கேதுவின் அகம் சார்ந்த காரகங்கள் என்பது மலட்டு தன்மை,மனோபலம்,உடலில் உள்ள அமிலம், சூது நிறைந்த எண்ணங்கள், கூன், கிரிமினல் எண்ணங்கள், சிக்கல் உள்ள பேச்சுக்கள் போன்றவை ஆகும்.
கேதுவின் அகம் சார்ந்த காரகங்கள் என்பது மலட்டு தன்மை,மனோபலம்,உடலில் உள்ள அமிலம், சூது நிறைந்த எண்ணங்கள், கூன், கிரிமினல் எண்ணங்கள், சிக்கல் உள்ள பேச்சுக்கள் போன்றவை ஆகும்.
கேதுவின் புறம் சார்ந்தகாரகங்கள் என்பவை கஞ்சா,அபின்,கிரிமினல்
வழக்குகள்,போலி பத்திரங்கள் தயாரித்தல்,வில்லங்கமான சொத்துக்கள்,மேஜிக், சட்ட
விரோதமாக கமிசன் தொழில் ஈடுபடுதல்,மாந்த்ரீகம், அரசியல் சூது போன்றவைகள் ஆகும்.
கேதுவின் ஒற்றைப்படை பாவங்களுடன் தொடர்பு கொண்டால் கேதுவின் காரகங்கள் மூலம் ஜாதகரின் உடல் மற்றும் மனதிற்கு எந்தவிதமான பிரச்சினைகளும் வராது.
கேதுவின் 1,5,9 என்ற பாவங்களை தொடர்பு கொள்ளும் பொழுது கேதுவின் புறசார்புடைய காரகங்கள் மூலம் ஜாதகருக்கு வருமானம் எதுவும் வராது.

ஆனால் கேதுவின் 3,7,11 பாவங்களை தொடர்பு கொள்ளும் பொழுது ஒரு அளவிற்கு ஜாதகருக்கு பொருளாதார முன்னேற்றம் இருக்கும்.
கேதுவின் 2,6,10 என்ற பாவங்களை தொடர்பு கொண்டால் கேதுவினுடைய புறச்சார்பு காரகங்கள் மூலம் சிறப்பான பொருளாதார முன்னேற்றம் இருக்கும். ஆனால் கேதுவின் 2,6,10 தொடர்பு அதனுடைய அகச்சார்புடைய காரகங்களை ஒரு அளவிற்குதான் அனுபவிக்க அனுமதிக்கும்.
கேதுவின் 8,12 பவதொடர்பு பெற்றால் அகம் மற்றும் புறச்சர்புடைய காரகங்கள் மூலம் ஜாதகருக்கு பிரச்சினைகள் வரும். அதாவது சட்டவிரோத செயல்கள், இரகசிய சதி, போதை பொருட்கள்,திருட்டில் மாட்டுதல்,ஆணவம் மற்றும் அகங்காரமான பேச்சு மூலம் பாதிப்புகள் ஏற்ப்படும்.
நன்றி நண்பர்களே!
SU.Suresh
astrovaasan@gmail.com
No comments:
Post a Comment