Saturday, 28 June 2014

அகம் சார்ந்த காரகங்கள் - உதாரணங்கள்



வணக்கம் நண்பர்களே!

ஒவ்வொரு பாவமும் மற்ற 11 பாவங்களின் காரகங்களை தன்னுள் வைத்துள்ளன. உதாரணமாக 6ம் பாவத்தின் அகம் சார்ந்த காரகம் நோய். இது ஆறாம் பாவத்தின் பொதுவான காரகம். என்ன நோய் என்ற கேள்வி எழும் போது நோயில் உள்ள 12 பாவ காரகங்களும் அதற்க்கான பதிலை தரும்.

1ம் பாவ காரகம் - உடலின் செயல்பாடு, தலை சம்மந்தமான நோய்கள்
2ம் பாவ காரகம் - கண்,வாய்,பல் சம்மந்தமான நோய்கள்
3ம் பாவ காரகம் - உணர்வு புலன்கள்,நரம்பு,மனம் சம்மந்தமான நோய்கள்
4ம் பாவ காரகம் - உடலில் உற்பத்தி செய்யும் உறுப்புகளில் வரும் நோய்கள்
5ம் பாவ காரகம் - உடலில் விந்து அணுக்கள்,இரத்த அணுக்கள் மூலம் வரும் நோய்கள்
6ம் பாவ காரகம் - வயிறு மற்றும் உணவு சம்மந்தமான நோய்கள்
7ம் பாவ காரகம் - தொற்று நோய் மற்றும் கிட்னி சம்மந்தமான நோய்கள்
8ம் பாவ காரகம் - உடல் உறுப்பு சேதம் மற்றும் மர்ம ஸ்தானங்களில் வரும் நோய்கள்
9ம் பாவ காரகம் -பாரம்பரிய நோய்கள்
10ம் பாவ காரகம் - தேவைக்கு அதிகமாக உடலில் சக்தி உர்ப்பதியவதால் வரும் நோய்கள்
11ம் பாவ காரகம் - வைட்டமீன்கள் மற்றும் மூட்டுகள் சம்மந்தமான நோய்கள்
12ம் பாவ காரகம் - ரகசிய மற்றும் கழிவு பொருட்கள் வெளியேற்றுவது சம்மந்தமான நோய்கள்
12 பாவங்களில் எந்த எந்த பாவங்கள் 6ம் பாவத்தை தொடர்பு கொள்ளுகின்றதோ அந்த பவ காரகங்கள் சம்மந்தமான நோய்கள் வரும் என
அறிந்து கொள்ளலாம்.

நன்றி நண்பர்களே!
Su.Suresh
astrovaasan@gmail.com
https://www.facebook.com/groups/249171261950892/

No comments:

Post a Comment