வணக்கம் நண்பர்களே!
திரிகோண பாவங்களை கீழ்கண்டவாறு வரிசைப்படுத்தி கொள்ளலாம் என்று பார்த்தோம்.
1,5,9 - அறம் ( தர்ம திரிகோணம் )
2,6,10 - பொருள் ( கர்ம திரிகோணம் )
3,7,11 - இன்பம் ( காம திரிகோணம் )
4,8,12 - வீடு ( மோட்ச திரிகோணம் )
ஓவ்வொரு பாவத்தையும் கெடுப்பது அதன் 12ம் பாவமும், 12ம் பாவத்தின் திரிகோண பாவங்களும் என்று பார்த்தோம்.
அதேபோல ஒரு திரிகோணத்தின் நடுநிலையான பாவங்கள் என்பது அதன் அடுத்த திரிகோண பாவங்கள் ஆகும்.
அதாவது கேள்விக்குரிய பாவத்தின் நடுநிலையான பாவங்கள் என்பது அதன் 2ம் பாவமும், அந்த 2ம் பாவத்தின் திரிகோண பாவங்களும் ஆகும்.
அதாவது 1,5,9 என்ற திரிகோணத்தின் நடுநிலையான பாவங்கள் என்பது அதன் அடுத்த திரிகோணமாகிய 2,6,10 பாவங்கள் ஆகும். 2,6,10 என்ற திரிகோணத்தின் நடுநிலையான பாவங்கள் என்பது அதன் அடுத்த திரிகோணமாகிய 3,7,11 பாவங்கள் ஆகும்
3,7,11 என்ற திரிகோணத்தின் நடுநிலையான பாவங்கள் என்பது அதன் அடுத்த திரிகோணமாகிய 4,8,12 பாவங்கள் ஆகும். 4,8,12 என்ற திரிகோணத்தின் நடுநிலையான பாவங்கள் என்பது அதன் அடுத்த திரிகோணமாகிய 1,5,9 பாவங்கள் ஆகும்.
உதாரணமாக 2ம் பாவத்தின் நடுநிலையான பாவங்கள் என்பது அதன் அடுத்த திரிகோனமகிய 3,7,11 ஆகும். அதேபோல் 4ம் பாவத்தின் நடுநிலையான பாவங்கள் என்பது அதன் அடுத்த திரிகோனமகிய 1,5,9 ஆகும்.
நன்றி நண்பர்களே!
astrovaasan@gmail.com
No comments:
Post a Comment