Saturday, 28 June 2014

புறச்சார்புடைய காரகங்கள் - உதாரணங்கள்



வணக்கம் நண்பர்களே!

ஒவ்வொரு பாவமும் மற்ற 11 பாவங்களின் காரகங்களை தன்னுள் வைத்துள்ளன என்று பார்த்தோம். உதாரணமாக 6ம் பாவத்தின் புறம் சார்ந்த காரகம் கடன். இது ஆறாம் பாவத்தின் பொதுவான காரகம். யார் மூலம் கடன் ஜாதகருக்கு கிடைக்கும் என்ற கேள்வி எழும் பொழுது 6ம் பாவத்தில் உள்ள உள்ள 12 பாவ காரகங்களும் பதில் கொடுக்கும்.

1ம் பாவ காரகம் – சுய முயற்சிகள் மூலம் கடன் கிடைக்கும்
2ம் பாவ காரகம் – பொன் பொருள், உலோகங்கள் மூலம் கடன் கிடைக்கும்.
3ம் பாவ காரகம் – பத்திரங்கள், ஒப்பந்தங்கள் மூலம் கடன் கிடைக்கும்.
4ம் பாவ காரகம் – வீடு, மனை, வாகனம் மூலம் கடன் கிடைக்கும்
5ம் பாவ காரகம் – கலை பொருட்கள் மற்றும் காதலர்கள் மூலம் கடன் கிடைக்கும்
6ம் பாவ காரகம் – வேலையாட்கள், வட்டி மற்றும் பணி செய்யும் இடத்தின் மூலம் கடன் கிடைக்கும்
7ம் பாவ காரகம் – வங்கி,காப்பீடு மூலம் கடன் கிடைக்கும்
8ம் பாவ காரகம் – ஆயுள் காப்பீடுகள் மூலம் கடன் கிடைக்கும்
9ம் பாவ காரகம் – நிதி நிறுவனங்கள் மூலம் கடன் கிடைக்கும்.
10ம் பாவ காரகம் – தொழில் மூலம் கடன் கிடைக்கும்
11ம் பாவ காரகம் – நண்பர்கள் மூலம் கடன் கிடைக்கும்
12ம் பாவ காரகம் – முதலீடுகள் மூலம் கடன் கிடைக்கும்
12 பாவங்களில் எந்த எந்த பாவங்கள் 6ம் பாவத்தை தொடர்பு கொள்ளுகின்றதோ அந்த பவ காரகங்கள் மூலம் ஜாதகருக்கு கடன் கிடைக்கும்.

நன்றி நண்பர்களே!
Su.Suresh
astrovaasan@gmail.com

No comments:

Post a Comment