Saturday, 28 June 2014

லக்னம் சார்ந்த மற்றும் லக்னம் சாரத காரகங்கள் – தொடர்ச்சி


 வணக்கம் நண்பர்களே!

12 பாவங்களும் 9 கிரகங்களும் லக்னம் சார்ந்த மற்றும் லக்னம் சாரத காரகங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

லக்னம் சார்ந்த காரகங்கள் என்பது ஜாதகரின் உடல் மற்றும் மனது முதலியவற்றை மட்டும் குறிக்கும் காரகங்கள் ஆகும்.

லக்னம் சாராத காரகங்கள் என்பது ஜாதகரின் உடலுக்கு வெளியே இருக்கும் காரகங்கள் ஆகும்.

கீழ்க்கண்ட உதாரணங்கள் மூலம் லக்னம் சார்ந்த மற்றும் லக்னம் சாரத காரகங்களை எப்படி பயன் படுத்துவது என்பதை சார ஜோதிட முறைப்படி விளக்கியுள்ளேன்.

உதாரணம் 1

2ம் பாவத்தில் உள்ள கண், பல், வாய், பேச்சு போன்றவை லக்னம் சார்ந்த காரகங்கள் ஆகும். கண்,பல்,வாய்,பேச்சு என்பது ஜாதகருக்கு மட்டுமே சொந்தமானது. ஜாதகரின் இறப்பிற்கு பிறகு மேற்கூறிய காரகங்கள் அவருடனேயே அழிந்து விடும்.

2ம் பாவத்தில் உள்ள பணம்,உலோகங்கள்,பொன்,ரத்தினங்கள் போன்றவைகள் லக்னம் சாராத காரகங்கள் ஆகும். பணம்,உலோகங்கள்,பொன்,ரத்தினங்கள் ஜாதகருக்கு மட்டுமே சொந்தமானது அல்ல. இவை ஜாதகரின் இறப்பிற்கு பின்பும் மற்றவர்களால் அனுபவிக்கப்படும்.

உதாரணம் 2
4ம் பாவத்தில் உள்ள கல்வி என்ற காரகம் லக்னம் சார்ந்தது. ஜாதகர் கற்ற கல்வி அவருக்கு மட்டுமே சொந்தமானது. அதே போல் வீடு, மனை, வாகனம் போன்ற காரகங்கள் லக்னம் சாராத காரகங்கள் ஆகும். இவற்றை ஜாதகருக்கு பிறகு மற்றவர்களாலும் அனுபவிக்க முடியும்.

உதாரணம் 3
பலன்கள் கூறும் போது லக்னம் சார்ந்த காரகங்களை லக்னத்தில் இருந்தும், லக்னம் சாராத காரகங்களை கேள்விக்குரிய பாவத்தில் இருந்தும் பரிசீலிக்க வேண்டும்.

2ம் பாவம் 6ம் பாவத்துடன் தொடர்பு கொள்ளும் போது நல்ல பண வரவு கிடைக்கும். இது லக்னம் சாரத பலன். லக்னம் சாராத பலன் சொல்லும் போது 6ம் பாவ தொடர்பு மூலமாக ஜாதகருக்கு கண்,பல்,வாய் போன்ற பகுதியில் நோய் ஏற்படும் என்று கூற வேண்டும்.

உதாரணம் 4
4ம் பாவம் 11ம் பாவத்துடன் தொடர்பு கொண்டால் ஜாதகருக்கு நன்றாக படிப்பு வரும். ஏன் என்றல் 11ம் பாவ தொடர்பு மூலம் ஜாதகருக்கு வெற்றி மற்றும் திருப்தி கிடைத்து இருக்கும். இது லக்னம் சார்ந்த பலன்.

அதே போல் 4ம் பாவத்தில் உள்ள வீடு,மனை,வாகனம் போன்ற லக்னம் சாரத காரகங்கள் ஜாதகருக்கு சரியாக அமையாது. வீடு,மனை மற்றும் வாகனங்கள் மூலமாக ஜாதகர் அடிக்கடி பிரச்சினைகளை அனுபவிப்பர். ஏன் என்றால் 11ம் பாவம் 4ம் பாவத்திற்கு 8ம் பாவமாக வரும்.

மேலும் 4ம் பாவம் 12ம் பாவத்துடன் தொடர்பு கொண்டால் ஜாதகருக்கு நன்றாக படிப்பு வராது. ஏன் என்றல் 12ம் பாவம் என்பது ஜாதகருக்கு தோல்விகளையும் ஏமாற்றத்யும் கொடுக்க கூடியது. அனால் வீடு,மனை மற்றும் வாகனங்கள் அமையும். ஏன் என்றல் 12ம் பாவம் 4ம் பாவத்திற்கு 9ம் பாவமாக வரும். அனால் வீடு,மனை மற்றும் வாகனங்கள் மூலமாக ஜாதகருக்கு பிரச்சினைகள் வரும் என்பதை மறந்து விட கூடாது.

நன்றி நண்பர்களே!
Su.Suresh
astrovaasan@gmail.com
https://www.facebook.com/groups/249171261950892/

No comments:

Post a Comment