Saturday, 28 June 2014

லக்னம் சார்ந்த மற்றும் லக்னம் சாரத காரகங்கள்


வணக்கம் நண்பர்களே!

இதுவரை நாம் 12 பாவங்களின் காரகங்களை பார்த்தோம். இந்த 12 பாவங்களை நாம் இரண்டு அணியாக பிரிக்க முடியும். அதாவது ஒற்றை படை பாவங்களாகிய 1,3,5,7,9,11ம் பாவங்களை ஒரு குழுவாகவும், 2,4,6,8,10,12 பாவங்களை ஒரு குழுவாக்கவும் பிரிக்கலாம்.

பொதுவாக பரிணாமம் என்பது குறிப்பட்ட பாவத்தின் 3ம் பாவம் ஆகும். இங்கு லக்னமாகிய ஒன்றாம் பாவத்தின் பரிணாமங்கலாக ஒற்றை படை பாவங்களும் (3,5,7,9,11), இரண்டம் பாவத்தின் பரிணாமங்கலாக இரட்டை படை பாவங்களும்(4,6,8,10,12) செயல் படுகின்றன.

முதல் அணியாகிய ஒற்றைபடை பாவங்கள் லக்னத்தை சார்ந்தும், இரட்டை படை பாவங்கள் இரண்டம் பாவத்தை முன்னிறுத்தியும் செயல் படுகின்றன.
ஒற்றைபடை காரகங்கள் பெரும்பாலும் ஜாதகரின் உடல்,மனது மற்றும் உணர்வுகள் போன்றவற்றை சார்ந்து இருக்கும். இரட்டைபடை பாவங்கள் பெரும்பாலும் பணம் மற்றும் பொருளாதாரம் சார்ந்து இருக்கும்.

உதாரணமாக,

1 பாவம் – ஆயுள் மற்றும் ஆரோக்கியம், ஜாதகரின் தனித்தன்மை
3 பாவம் – தைரியம், தன்னம்பிக்கை, மனோபலம்
5 பாவம் – உயிரினை உருவாக்கும் சக்தி, சிற்றின்பம்
7 பாவம் – கணவன் மனைவி உறவு
9 பாவம் – அதிஷ்டம்,உயர்கல்வி,தெய்வ நம்பிக்கை
11 பாவம் – ஜாதகரின் விருப்பங்கள், வெற்றி
2 பாவம் – கையிருப்பு பணம், தனம் வரும் வழி
4 பாவம் – ஜாதகரின் சொத்துக்கள்
6 பாவம் – ஜாதகரின் மாத சம்பளம், கடன்,வாடகை
8 பாவம் – எதிர்பாராத பணவரவு, சட்டத்திற்கு புறம்பான முறையில் கிடைக்கும் பணம், காப்பீட்டு பணம்
10 பாவம் – தொழில்,பதவி
12 பாவம் – முதலீடுகள், இரண்டாவது தொழில்

ஒவ்வொரு பாவமும் மற்ற 11 பாவகங்களின் காரகங்களையும் தன்னகத்தே வைத்துள்ளது. ஆகவே ஒவ்வொரு பாவமும் லக்னம் சார்ந்த மற்றும் லக்னம் சாரத காரகங்களை கொண்டுள்ளது.

இருந்தாலும் ஒற்றைப்படை பாவகங்கள் பெரும்பாலானவை அகம் சார்ந்தும் இரட்டை படை பாவங்கள் பெரும்பாலும் புறம் சார்ந்தும் உள்ள காரகங்களை கொண்டுள்ளது.

அடுத்த பதிவில் அகம் மற்றும் புறம் சார்ந்த காரகங்கள் பற்றிய உதாரணக்களை பார்க்கலாம்.

நன்றி நண்பர்களே!
Su.Suresh
astrovaasan@gmail.com
https://www.facebook.com/groups/249171261950892/

No comments:

Post a Comment