Saturday, 28 June 2014

அரசியல் யோகம் எப்படி அமையும்? - பாகம் 1



அரசியல் - பெயர், புகழ்,வசதி மற்றும் பல விசயங்களை ஒட்டு மொத்தமாக கொண்டுள்ள தொழில். அந்த தொழிலில் ஒருவர் ஈடுபட வேண்டும் என்றால் அவருடைய ஜாதக அமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதை சார ஜோதிட முறையில் பார்க்கலாம்.

5ம் பாவம் என்பது அரசியல் மற்றும் கலைத்துறை சார்ந்த துறைகளை கொண்டுள்ளது. 7ம் பாவம் என்பது மக்கள் தொடர்பினை குறிக்கக்கூடியது. அந்த 7ம் பாவத்திற்கு 11ம் பாவமாகிய 5ம் பாவம் 7ம் பாவத்திற்கு திருப்தி மற்றும் மகிழ்ச்சியை கொடுக்க கூடியது. எனவே ஜாதகரின் 5ம் பாவத்தின் உபநட்சதிர அதிபதி   அதற்கு சாதகமான பாவங்களுடன் தொடர்பு கொண்டால் தான் மக்கள் கூட்டத்தை திருப்தியுடன் மகிழ்ச்சியுடன் வைத்து இருக்க முடியும். அவரால் அதிக காலங்கள் அரசியலில் இருக்க முடியும்.

5ம் பாவத்தின் உபநட்சதிர அதிபதி அதற்கு பாதகமான பாவங்களுடன் தொடர்பு கொண்டால் கலை துறையில் நீடித்து இருக்க முடியாது. மேலும் 5ம் பாவம் 10ம் பாவத்திற்கு சாதகமான பாவங்களுடன் தொடர்பு கொண்டும் இருக்க வேண்டும். அவரால் தான் அரசியலை முழு நேர தொழிலாக செய்ய முடியும்.

அதாவது 5ம் பாவத்தின் உப நட்சத்திர அதிபதி தான் நின்ற நட்சத்திர உபநட்சதிரம் மூலம்   5 மற்றும் 10 ம் பாவங்களுக்கு 8 மற்றும் 12 ம் பாவங்களாகிய 4,12 மாற்றும் 5,9 ம்  பாவங்களை தொடர்பு கொள்ள கூடாது.

மேலும் 1ம் பாவமும் 5ம் பாவத்திற்கு சாதகமான பாவங்களுடன் தொடர்பு கொள்ள வேண்டும். ஏனென்றால் லக்னம் தான் கொடுப்பினையை நிர்ணயம் செய்வது. லக்னம் தான் நின்ற நட்சத்திர உப நட்சத்திரத்தின் மூலமாக எந்த எந்த பாவங்களுடன் தொடர்பு கொள்ளுகின்றதோஅந்த பாவங்களின் ரீதியான சிந்தனைகளுடன் ஜாதகர் இருப்பார். எனவே 5ம் பாவத்திற்க்கு  சாதகமற்ற பாவங்களாகிய 4,12ம் பாவங்களை தொடர்பு கொள்ள கூடாது. அப்படி தொடர்பு கொண்டால் அவரால் அரசியலில் ஈடுபட முடியாது.

லக்ன பாவம் 5ம் பாவத்திற்கு சாதகமற்று இருந்து, 5ம் பாவம் அரசியலுக்கு சாதகமாக இருந்தால், தசா புத்திகள் வலிமையான முறையில் 2,3,6,10,11ம் பாவங்களுடன் நன்றாக அமைத்தால் அந்த காலங்களில் மட்டும் அரசியலில் சிறப்பாக செயல்படுவார்.

லக்னம் மற்றும் 5ம் பாவங்கள் அரசியலுக்கு சாதகமாக இல்லாமல் தசா புத்திகள் மற்றும் அரசியலுக்கு வலிமையான முறையில் சாதகமாக இருந்தால், அந்த கால கட்டத்தில் மட்டும் அரசியலில் ஈடுபட முடியும். அவர்களுக்கு M.L.A மற்றும் MP போன்ற பதவிகள் கிடைக்காது.

சார ஜோதிட ஜோதிடம் பார்க்க மற்றும் சார ஜோதிடம் மூலம்   பலன் கூறும் பயிற்சி வகுப்பிற்கு தொடர்பு கொள்ளவும். 

நன்றி நண்பர்களே! 

SU.சுரேஷ் 

9994690117

No comments:

Post a Comment