Saturday, 28 June 2014

அரசியல் யோகம் எப்படி அமையும்? - பாகம் 4


வணக்கம் நண்பர்களே!

5ம் பாவம் 1ம் பாவத்துடன் தொடர்பு கொண்டு இருந்தால் அந்த ஜாதகருக்கு  சிந்தனை,சுயமுயற்சி, கற்பனைதிறன் போன்றவைகள் ஜாதகருக்கு நன்றாக இருக்கும் என்று பார்த்தோம்.

இங்கு 5ம் பாவம் தான் நின்ற நட்சத்திர உபநட்சத்திரம் மூலம் 2ம் பாவத்தினை தொடர்பு கொள்ளும் போது உண்டாகும் பலன்களை பார்ப்போம்.

அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு முக்கியமாக இருக்க வேண்டியது பேசும் திறன், அதாவது மேடை பேச்சு. மேடையில் பேசத்தெரியதவர்கள் அரசியலில் சிறப்பானதொரரு இடதிற்க்கு வர முடியாது.

சில காட்சிகளில் சிலரை மேடை பேச்சுக்காகவே பயன் படுத்தி கொள்ளுவார்கள். அதன் மூலம் அவருக்கு வருமானம் கிடைக்கும். இதற்கு காரணம் 5ம் பாவமானது தான் நின்ற நட்சத்திர உப நட்சத்திரத்தின் மூலமாக 2ம் பாவத்தை தொடர்பு கொண்டு இருப்பதால் உடல் உழைப்பு இல்லாத வகையில் பேச்சின் மூலமாக அவர்களுக்கு வருமானம் வரும்

இந்த அமைப்பு உள்ளவர்கள் நிகழ்வுகளை எளிமையான முறையில் சொந்த கருத்துகள் மூலமாக அடிதட்டு தொண்டனுக்கு கூட புரிகின்ற வகையில் நன்றாக பேசுபவராக இருப்பார். இந்த அமைப்பு உள்ள ஜாதகருக்கு நியாபக சக்தி அதிகமாக இருக்கும்.

நன்றி நண்பர்களே!

Su.Suresh
astrovaasan@gmail.com

No comments:

Post a Comment