வணக்கம் நண்பர்களே!
5ம் பாவம் 3ம் பாவத்துடன் தொடர்பு கொண்டு இருந்தால் அந்த ஜாதகருக்கு
அரசியல் பிரயாணங்கள், விளம்பரங்கள்,நூல்கள் வெளியிடுதல் மூலமாக
புகழ் பெறுவார் என்று பார்த்தோம்.
இங்கு 5ம் பாவம் தான் நின்ற நட்சத்திர உபநட்சத்திரம் மூலம் 4ம்
பாவத்தினை தொடர்பு கொள்ளும் போது உண்டாகும் பலன்களை பார்ப்போம்.
5ம் பாவம் 4ம் பாவ தொடர்பினை பெரும் பொழுது ஜாதகர் எப்பொழுதும்
அறிவுக்கு மதிப்பு கொடுப்பவராக இருப்பார். மேலும் ஜாதகருக்கு கற்பனைவளம் குறைவாகத்தான்
இருக்கும். உள்ளதை உள்ளபடி மக்களிடம் பேசிவிடுவார். அரசியலுக்கு உரிய நெளிவு
சுளிவு பேச்சில் இருக்காது. மக்களுக்கு புரியும்படியாகவும் சரியாக பேச தெரியாது.
4ம் பாவம் என்பது 5ம் பாவத்திற்கு 12ம் பாவமாக வருவதால் அவருடைய
பேச்சில் கற்பனை மற்றும் கவர்ச்சி என்பது இருக்காது. சில நேரங்களில் அவருடைய
பேச்சின் மூலமாக பிரச்சினைகளை அனுபவிப்பார். இவர் தனது சொந்த ஊரிலேயே அரசியல் பதவி
வகிப்பார். அதன் மூலம் சொத்துக்கள் அதிகம் சேர்த்துவிடுவார்.
இவருக்கு அதிகமான போட்டிகள் இருக்கும். ஏனென்றால் 4ம் பாவமானது 10ம்
பாவத்திற்கு 7ம் பாவமாக வருவதால் கடேசி வரை ஜாதகர் போட்டிகளுடனேயே அரசியல்
வாழ்க்கையில் ஈடுபடுவார்.
நன்றி நண்பர்களே!
Su.Suresh
astrovaasan@gmail.com
No comments:
Post a Comment