Saturday, 28 June 2014

லக்னம் சார்ந்த மற்றும் லக்னம் சாரத காரகங்கள் – புதன்


வணக்கம் நண்பர்களே!

புதனின் அகம் சார்ந்த காரகங்கள் என்பது புத்தி கூர்மை,மெலிந்த தோற்றம்,கல்வி,நரம்பு மண்டலம் போன்றவை ஆகும்.

புதனின் புறம் சார்ந்தகாரகங்கள் என்பவை காவியம்,சிற்பம்,கணிதம்,ஜோதிடம்,தகவல் தொடர்பு,பத்திரிக்கை,போக்குவரத்து  போன்றவைகள் ஆகும்.

புதனின் ஒற்றைப்படை பாவங்களுடன் தொடர்பு கொண்டால் புதனின் காரகங்கள் மூலம் ஜாதகரின் உடல் மற்றும் மனதிற்கு எந்தவிதமான பிரச்சினைகளும் வராது.

புதனின் 1,5,9 என்ற பாவங்களை தொடர்பு கொள்ளும் பொழுது புதனின் புறசார்புடைய காரகங்கள் மூலம் ஜாதகருக்கு வருமானம் எதுவும் வராது.

ஆனால் புதனின் 3,7,11 பாவங்களை தொடர்பு கொள்ளும் பொழுது ஒரு அளவிற்கு ஜாதகருக்கு பொருளாதார முன்னேற்றம் இருக்கும்.

புதனின் 2,6,10 என்ற பாவங்களை தொடர்பு கொண்டால் புதனினுடைய புறச்சார்பு காரகங்கள் மூலம் சிறப்பான பொருளாதார முன்னேற்றம் இருக்கும். ஆனால் புதனின் 2,6,10 தொடர்பு அதனுடைய அகச்சார்புடைய காரகங்களை ஒரு அளவிற்குதான் அனுபவிக்க அனுமதிக்கும். 

புதனின் 8,12 பவதொடர்பு பெற்றால் அகம் மற்றும் புறச்சர்புடைய காரகங்கள்  மூலம் ஜாதகருக்கு பிரச்சினைகள் வரும். அதாவது காசோலை, மின்சாரம், ஜாமீன், நியாபக மறதி,கலப்படம்,புகைப்படம், நரம்பு மண்டலம் மூலம் பாதிப்புகள் ஏற்ப்படும்.


நன்றி நண்பர்களே!
SU.Suresh
astrovaasan@gmail.com

No comments:

Post a Comment