Friday, 27 June 2014

1ம் பாவம் – லக்ன பாவம் – என்ன கொடுக்கும்?


 வணக்கம் நண்பர்களே!

வாழ்க்கை என்ற சக்கரத்தின் முதல் முக்கிய புள்ளி லக்னமாகும். ஒருவருடைய தனித்தன்மையை நிர்ணயம் செய்வதில் லக்னம் மிக மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. மூளை எப்படி நம்முடைய உடம்பை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்து இயக்குகிறதோ அதேபோல லக்னமனது அனைத்து பாவங்களையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்து ஜாதகத்தை இயக்கும். ஜாதகரின் தோற்றத்தை நிர்ணயம் செய்வதும் லக்னமாகும்.

1ம் பாவம் – லக்ன பாவம் – காரகங்கள்

ஜாதகரின் எண்ண ஓட்டம்
தலையும் தலையின் மேல் பாகமும்
ஆயுள்
தூர பயணம்
போராட்டமான வாழ்க்கை
சுய முயற்சி
ஆரோக்கியம்
ஆண்மை
பெருந்தன்மை
ஒழுக்கம்
புகழ்
நிர்வாக திறன்
வெற்றி அல்லது தோல்வி
நோய் எதிர்ப்பு திறன்
தான் என்ற எண்ணம்
கவுரவத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தல்
கவுரவத்தை இழத்தல்
லக்ன பாவம் ஒருவருக்கு முழுவதுமாக பாதிக்கப்பட்டு மற்ற 11 பாவங்கள் நல்ல நிலையில் இருந்தலும் ஜாதகரால் அவற்றை அனுபவிக்க முடியாது.

நன்றி நண்பர்களே!
Su.Suresh
astrovaasan@gmail.com

No comments:

Post a Comment